விசித்ரா வைத்த வேற லெவல் ஆப்பு..! கதறி அழுத ஸ்ருஷ்டி.! என்ன நடந்ததுன்னு தெரியுமா..?

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் சிருஷ்டி தனக்கு கொடுத்த உணவை மாற்றி கொடுத்ததால் அழுகிறார். அதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை இரண்டு நாட்களாக நடைபெறும். சனிக்கிழமை எபிசோடில் அட்வான்டேஜ் டாஸ்க்குகள் வைக்கப்படும். இதில் அட்வான்டேஜ் வெல்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடில் இரண்டு அட்வான்டேஜ்கள் வழங்கப்படும். முதல் அட்வான்டேஜ் ஏதாவது ஒரு பத்து நிமிடம் நடுவர்கள் கொடுக்கும் தொல்லைகள் இல்லாமல் சமைக்கலாம். மற்றொரு அட்வான்டேஜ் தனக்கு வந்த உணவு பிடிக்கவில்லை என்றால், அதை வேறு ஒருவரிடம் மாற்றிக் கொள்ளலாம் என்கிற இரண்டு சலுகைகள் அட்வான்டேஜ் வென்ற போட்டியாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த சீசனில் இந்த அட்வான்டேஜினால் சிறிது சலசலப்புகளும் ஏற்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ரா வைத்த வேற லெவல் ஆப்பு..! கதறி அழுத ஸ்ருஷ்டி.! என்ன நடந்ததுன்னு தெரியுமா..? 1
சென்றமுறை அட்வாண்டேஜ் வென்ற குரேஷி பாகற்காயை சிவாங்கிக்கு மாற்றி கொடுத்திருந்தார். இதனால் சிவாங்கியால் சரிவர சமைக்க முடியவில்லை. பாகற்காயை வைத்து இனிப்பு செய்ய வேண்டும் என்று கூறியிருந்ததால் சிவாங்கியின் முகமே வாடிப் போயிருந்தது. மேலும் போனவாரமும் மீண்டும் அவருக்கு பாகற்காய் வந்ததால் அவர் முகம் வாடிய நிலையில் காணப்பட்டிருந்தார். அட்வாண்டேஜை ஒருவருக்கு மாற்றி கொடுப்பதினால் இது போன்ற சிக்கல்கள் இந்த சீசனில் எழுந்திருக்கிறது. அதேபோல தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரம் அசைவ உணவுகளை சமைக்க வேண்டும் என்கிற போட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் விசித்ரா தனக்கு மட்டன் வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். விசித்ரா அட்வாண்டேஜ் ஜெயித்திருந்ததால் வேறு ஒருவரிடம் இருக்கும் மட்டனை விசித்ராவிற்கு வழங்கலாம் என்று நடுவர்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.


விசித்ராவும் தனக்கு கிடைத்த அட்வான்டேஜை பயன்படுத்தி சிருஷ்டியிடம் இருக்கும் மட்டனை வாங்கிக் கொள்ள முடிவெடுக்கிறார். இதனால் கடுப்பான ஸ்ருஷ்டி கோபத்தில் கண் கலங்குகிறார். இது மூன்றாவது முறையாக எனக்கு இப்படி நடக்கிறது என்று சொல்லி சிருஷ்டி அழுகிறார் ஏற்கனவே சிவாங்கி பாகற்காய் வந்த பொழுது நான் போட்டிக்கு வரவில்லை என்று சொல்லி நடுவர்களை கோபப்படுத்தி இருந்தார். அந்த வகையில் தற்போது சிருஷ்டியும் தனக்கு அட்வான்டேஜ் பயன்படுத்தி உணவை மாற்ற வேண்டாம் என்று சொல்லி அழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்