இந்த வாரம் CWC-ல கிராமத்து விருந்து.! கறி விருந்து Vs சிக்கன் பிரியாணி.! பாக்கும் போதே நாக்கு ஊறுதே.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக தற்போது கிராமத்துக்கு சென்று கிராமத்து உணவுகளை சமைத்திருக்கின்றனர். தற்போது வெங்கடேஷ் பட் தலைமையில் குக் வித் கோமாளி டீம் ஒரு அணியாகவும், செஃப் தாமு தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து இருக்கின்றனர். மேலும் இந்த சீசனில் எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் வருகை தந்திருக்கின்றனர். இந்த செலிபிரேஷன் வீக்கின் தற்போது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலேயே முதலிடம் பிடித்திருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் பத்து குக்குகள் ஆரம்பத்தில் களமிறங்கி இருந்தனர். அதில் மதுரை காளையன், ராஜ் ஐயப்பா, இயக்குனர் கிஷோர், வி.ஜே விஷால், ஷெரின் என மொத்தம் ஐந்து குக்குகள் எலிமினேட் ஆன நிலையில் மீதம் 5 குக்குகள் இருந்தனர். இந்த வாரம் இருவரை புதிதாக களமிறக்கி உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் CWC-ல கிராமத்து விருந்து.! கறி விருந்து Vs சிக்கன் பிரியாணி.! பாக்கும் போதே நாக்கு ஊறுதே.! 1

பிரபல பழம் பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் என்பவரை புதிய குக்காக களம் இறக்கி இருக்கின்றனர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கும் அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிய குக்காக களம் இறங்கி இருக்கிறார். அடுத்ததாக குக் வித்து கோமாளி செட்டை அமைத்த கலை இயக்குனராக இருக்கும் கிரண் என்பவரையும் களம் இறக்கி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இன்று தங்களது முதல் சமையலை முடித்து இருக்கின்றனர். இந்த வாரம் அட்வான்டேஜ் டாஸ்க்கில் நிலக்கடலை சட்னியை அம்மியில் அரைக்கும் டாஸ்க்கை நடுவர்கள் கொடுத்திருந்தனர். அதில் சிவாங்கி வெற்றி பெற்றிருந்தார். மேலும் விசித்ரா, ஆண்ட்ரியன், மைம் கோபி ஆகிய மூன்று பேரும் முதல் மூன்று இடங்களை பிடித்தருந்தனர். அதில் விசித்ரா வெற்றி பெற்று சுனிதாவும் விசித்திராவும் டிவியை பரிசாக பெற்றிருந்தனர். இந்த நிலையில் அடுத்த வாரம் குக் வித் கோமாளி வரலாற்றிலேயே நடக்காத ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக ரக்ஷன் அறிவித்தௌ நிகழ்ச்சியை முடித்து இருந்தார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர். அங்கு 150 பேருக்கு பிரியாணி உணவு சமைக்கப்பட இருக்கிறது. மேலும் வெங்கடேஷ் பட் தலைமையில் போட்டியாளர்கள் ஒரு குழுவாகவும் செஃப் தாமு தலைமையில் போட்டியாளர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிந்திருக்கின்றனர். இதனால் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு காமடிக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்