இவருக்கு பதில் இவரா.? ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கோபி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி விலகவில்லை என்றும், அவருக்கு பதில் இவர் என்றும் தற்போது இரு வேறுபட்ட கருத்துடன் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கோபியே சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்டு “ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து..! வேறு என்ன சரக்கு தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த பலரும் அவர்தான் புதிய கோபியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் .இன்னும் சிலரோ அவர் கோபி இல்லை, கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதில் இவர் புதிதாக இவர் வந்துள்ளார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் கதாநாயகிக்கு சரிசமமாக கதாநாயகனுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது சதீஷ்க்கு தான். சன் டிவியில் பல தொலைக்காட்சி தொடரில் கதாநாயகன், வில்லன் என்று பல வேடங்களை ஏற்று நடித்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது பாக்கியலட்சுமி தொடர்.

தொடர்புடையவை  கடைசி இடத்தில் இருந்த ஜனனி மற்றும் ஆயிஷா.! 2வது போட்டியாளரை வெளியே அனுப்பிய பிக்பாஸ்

இவருக்கு பதில் இவரா.? ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கோபி..! 1

விளம்பரம்

இந்தத் தொடருக்கு பின்னால் சதீஷ் என்கிற பெயரே மறந்து கோபி என்று சொன்னால் தான் தெரியும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறார் சதீஷ். இந்த தொடரில் இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு திருமணமான மகன்கள் இருக்கும் நிலையில் இரண்டாவது ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். ராதிகாவை திருமணம் செய்த நாள் தொடங்கி அவருக்கு மன நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். பின்னர் மூத்த மனைவி பாக்யாவின் வீட்டில் தஞ்சம் அடைகிறார். அங்கிருந்து நாடகம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது மனைவியும் மூத்த மனைவியின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கோபி நான் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும், இன்னும் தனக்கு பத்து பதினைந்து எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாக இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மீண்டும் இன்று ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், சிலர் நான் வெளியேறியது குறித்து தவறான செய்தி பரப்புகிறார்கள் நான் விரைவில் உண்மையை உடைப்பேன் என்று பேசியிருந்தார்.

தொடர்புடையவை  சித்துவை ஏமாற்றி மங்களூருவில் இருந்து கோவாவுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயா..!

இவருக்கு பதில் இவரா.? ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கோபி..! 3

விளம்பரம்

இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் செழியன் கோபி மற்றும் சின்னத்திரை நடிகர் அரவிந்த் ஆகியோர் இருக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் நடக்கும் ஈவிபி சிட்டியிலிருந்து இந்த புகைப்படம் எடுத்ததாக சதீஷ் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த பலரும் இவர்தான் புது கோபியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்து வந்தார். அவர் விலகிய நிலையில் அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் அரவிந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகர் அரவிந்த் தான் புதிய கோபி என்று வதந்தியை கிளப்பி இருக்கின்றனர். ஆனால் அவர் கோபியின் நண்பராக பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டு தனக்கு மனக்கஷ்டம் வரும் போதெல்லாம் சந்தித்து பேசும் நபரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது தெரிய வந்திருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment