கடைசி இடத்தில் நின்று இருந்த VJ விஷால் மற்றும் மைம் கோபி.! வெளியே போனது யாருனு தெரியுமா?

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது எலிமினேஷனாக இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப திடீர் ட்விஸ்டுடன் இந்த வாரம் நிகழ்ச்சி முடிவடைந்து இருக்கிறது. குக் வித் கோமாளி சீசன் 4 ஆரம்பித்து சுமார் ஒரு மாதங்களை கடந்து விட்டது. 8 எபிசோடுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை ஒரு குக் மட்டுமே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இன்று இரண்டாவது வார எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது குக்குகள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆண்ட்ரியன் இம்யூனிட்டி பேண்ட் வாங்கிய காரணத்தினால் இந்த முறை அவர் சமைக்கவில்லை. மொத்தம் எட்டு குக்குகள் போட்டியில் இருந்தனர். கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் டாஸ்க்கில் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி இடத்தில் நின்று இருந்த VJ விஷால் மற்றும் மைம் கோபி.! வெளியே போனது யாருனு தெரியுமா? 1
இந்த வாரம் சற்று வித்தியாசமாக அட்வான்டேஜ் டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. அதில் குச்சி வத்தல் செய்யும் டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து மைம் கோபி அட்வாண்டேஜை வெற்றி பெற்றிருந்தார். அடுத்தபடியாக மெயின் டாஸ்க்கில் நான்கு குக்குகள், மற்ற நான்கு பேருடன் நேரடியாக மோதும் பேஸ் ஆப் குக்கிங் எனப்படும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட குக்கிங்கை வைத்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர் நடுவர்கள். இதனால் போட்டியாளர்களுக்கிடையே நேரடி மோதல் உருவாகி இருந்தது. இரண்டு பேரும் ஒன்றாக வந்து சமைத்த உணவை வைக்கும் பொழுது அந்த உணவை ருசி பார்த்து விட்டு எந்த டீம் நன்றாக சமைத்து இருந்தார்களோ அவர்களை நேரடியாக வெற்றியாளர் என்று அறிவித்திருந்தனர். அதன்படி மற்ற அனைத்து போட்டியாளர்களும் வெற்றி பெற பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்து வரும் விஜே விஷால் மற்றும் மைம் கோபி இருவரும் சற்று பின்தங்கி இருந்தனர். இதனால் இவர்கள் இருவருமே கடைசி இரண்டு இடத்திற்கு தள்ளப்பட்டு இருந்தனர்.


மைம் கோபி மற்றும் எழில் இருவரில் யாராவது ஒருவர் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்று நடுவர்கள் முடிவுக்கு வந்திருந்தனர். இருவரும் மிக உணர்ச்சிபூர்வமாக பேசியும் இருந்தனர். கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் இவர்கள், ஸ்ட்ராபெரியை வைத்து உணவு சமைத்து இருந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த நடுவர்கள் இந்த இரண்டு பேருமே எலிமினேட் செய்யாமல் சர்ப்ரைஸ் கொடுத்து கோமாளிகள் மற்றும் அனைத்து குக்குகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினா.ர் இதனால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் அடுத்த வாரம் இம்யூனிட்டி வாரத்திற்கு 9 குக்குகளும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இதனால் அனைத்து குக்குகள் மற்றும் கோமாளிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்