உங்களுடன் வாழ்ந்ததே முட்டாள்தனம் என்று இமான் அவர்களின் முன்னாள் மனைவி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுக்கு 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் கடந்த வாரம் இமான் எமிலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் குறித்து இமானின் முன்னாள் மனைவி போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் “டியர் இமான் உங்கள் இரண்டாவது திருமணத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! 12 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சுலபத்தில் உங்களால் மறக்க முடிகிறது என்றால், உங்களுடன் வாழ்ந்து என் நேரத்தை வீண்டித்துவிட்டேன், அதற்காக வருத்தப்படுகிறேன். உங்களின் சொந்த குழந்தைகளை இரண்டு வருடங்களாக பார்க்க கூட இல்லை”!! ஆனால் அவர்களுக்குப் பதில் வேறு நபர்களை உங்களால் தேட முடிந்து இருக்கிறது,
என் இரண்டு குழந்தைகளையும் உங்கள் அப்பாவிடமிருந்து காப்பேன் என்றும், தேவைப்பட்டால் அந்த புது (எமிலியின்) குழந்தையையும் காப்பேன் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். இமானின் இரண்டாவது திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வரும் நிலையில் இமானின் முதல் மனைவி போட்ட இந்த சர்ச்சை பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டை நீங்களும் காண..Twitter Original Source From: Monica Richard