இவரின் முகவரி அல்லது போன் நம்பர் கிடைக்குமா? ரயிலில் பாடிய பெண்ணை தேடும் இமான்

வெளியிட்டது

வறுமையில் வாடும் திறமை உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் இமான் முன்மாதிரியாக விளங்குகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான ஒரு பெண்மணியின் முகவரியை தான் அவர் தேடிக் கொண்டிருக்கிறார். ட்ரையினில் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற ஜீன்ஸ் படத்தில் வரும் பாடலை அந்தப் பெண் கையில் ஒரு சிறிய இசைக்கருவியை கொண்டு மிக அருமையாக பாடி இருக்கிறார்.தமிழ் இசை உலகில் முண்ணனி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தனித்துவமான இசையும், புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரபலமாக்கி அழகு பார்ப்பதும் இமானுடைய சாதனைகள். இவரது இசைக்கென்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளன. மெல்லிசையில் சமீபகாலமாக கொடி கட்டி பறந்து வருகிறார். கும்கி மற்றும் மைனா படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்தன. இது போன்ற பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார் டி.இமான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவரின் முகவரி அல்லது போன் நம்பர் கிடைக்குமா? ரயிலில் பாடிய பெண்ணை தேடும் இமான் 1

 

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது விசில் தான். அதில் வரும் அழகிய அசுரா பாடலுக்குப் பின்பே வெளிச்சத்திற்கு வந்தார். தமிழின் முண்ணனி நடிகர்கள் அனைவர் படத்திலும் இசையமைத்து விட்டார். ரஜினி நடித்த அண்ணாத்த, விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த விஸ்வாசம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என அனைவருடனும் படம் செய்து விட்டார். இதில் விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் உலகெங்கும் ஹிட் அடித்துள்ளது. இவருக்கு 2008ம் ஆண்டு மோனிக்கா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவடைந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் இமான்.

பார்வை குறைபாடு உள்ள திருமூர்த்தி என்பவர் கண்ணான கண்ணே பாடலை பாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இதனால் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த இமான், தனது குழுவில் இணைந்து அவருக்கு பணியாற்றும் வாய்ப்பையும் இசைப் பயிற்சியும் அளித்து வந்தார். இந்த நிலையில் மற்றொரு திறமைசாலியை தேடி வருகிறார் இமான். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான ஒரு பெண்மணியின் முகவரியை தான் அவர் தேடிக் கொண்டிருக்கிறார். ட்ரையினில் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற ஜீன்ஸ் படத்தில் வரும் பாடலை அந்தப் பெண் கையில் ஒரு சிறிய இசைக்கருவியை கொண்டு மிக அருமையாக பாடி இருக்கிறார். அவரின் முகவரி அல்லது போன் நம்பர் தெரிந்தால் யாராவது கூறவும் என்று இமான் கேட்டிருக்கிறார். இவ்வாறு வறுமையில் வாடும் திறமை உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் இமான் முன்மாதிரியாக விளங்குகிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்