வாத்தி கம்மிங்..ஒத்து..மரண மாஸாக வெளியானது வாத்தி படத்தின் டீசர்..! | Vaathi Official Teaser

தனுஷின் 39 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது பல அவமானங்களையும், விமர்சனங்களையும் சந்தித்தார். தற்போது பாலிவுட், ஹாலிவுட் டோலிவுட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் இன்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், அட்ராங்கிரே, மாறன் என ஓடிடியில் வெளியான மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து. இதனால் தனது கைவசம் உள்ள படங்களில் மிக கவனத்துடன் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். கீழே உள்ள டீசர் வீடியோவை பார்க்கவும்.

 

விளம்பரம்

வாத்தி கம்மிங்..ஒத்து..மரண மாஸாக வெளியானது வாத்தி படத்தின் டீசர்..! | Vaathi Official Teaser 1

அவர் நடிப்பில் வெளியான தி கிரேமேன் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது ரூசோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியிருந்தனர். இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளார் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் நடித்து வரும் மூன்று முக்கியமான படங்கள் வாத்தி, திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் . இதில் திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாத்தி படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். மேலும் அசுரன் படத்தில் இவருக்கு மகனாக நடித்த நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஏன் அரை நி*வாணமாக நடித்தேன்? உண்மைகளை உடைத்து பேசிய இரவின் நிழல் பட ஹீரோயின் பிரிகிடா

வாத்தி கம்மிங்..ஒத்து..மரண மாஸாக வெளியானது வாத்தி படத்தின் டீசர்..! | Vaathi Official Teaser 3

 

விளம்பரம்

இந்தப் படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்த படத்திற்கான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாக உள்ள முதல் படம் இதுவே ஆகும். படத்திற்கான பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில், நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது டீசர் வெளியாகியுள்ளது அந்த டீசரை நீங்களும் காண…Watch Vathi Teaser Below..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sithara Entertainments

விளம்பரம்

Leave a Comment