தி லெஜெண்ட் முழு திரை விமர்சனம் இதோ – ரேட்டிங் 2/5

உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் “தி லெஜன்ட்” திரைப்படம். இந்த படத்திற்கான அறிவிப்பு வந்த நாள் முதலே பலரும் படத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் படம் இன்று அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி வெளியான நிலையில், பலரும் அந்த படத்தை பார்க்க அதிகாலை முதலே தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை பலரும் அவரது முதல் முயற்சிக்காக பாராட்டி வருகின்றனர். இருந்த போதிலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆக்ஷன் காட்சிகள் சிரிப்பை வரவழைத்ததாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் பிரபு, விஜயகுமார், சின்ன கலைவாணர் விவேக், யோகி பாபு, மயில்சாமி, நாசர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா? என்ற விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம்.

தி லெஜெண்ட் முழு திரை விமர்சனம் இதோ - ரேட்டிங் 2/5 1

விளம்பரம்

 

தொடர்புடையவை  "பிரதாப் பொத்தனின் மறைவு..உடைந்து போன தென்னிந்திய பிரபலங்கள்"!!

படத்தின் கதாநாயகன் சரவணன் ஒரு அறிவியல் விஞ்ஞானியாக இருக்கிறார். இவரின் சாதனைகள் உலக நாடுகளை அசர வைக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய படிப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காக தனது சொந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும், அந்த ஊரில் வாழும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது புதுமையான விஷயங்களை செய்ய வேண்டும் என்று சொந்த ஊருக்கு திரும்புகிறார் சரவணன். அங்கு தனது பள்ளி காலத்து நண்பரான ரோபோ சங்கரை சந்திக்கிறார். ரோபோ சங்கரின் மனைவி மற்றும் அவருக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்குமே பிறந்ததிலிருந்தே சர்க்கரை வியாதி இருக்கிறது. சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர் ஒருநாள் மரணம் அடைந்து விடவே இதை கண்ட சரவணன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இதனால் இதற்கான தீர்வை கண்டுபிடித்து இனி இந்த உலகில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் சர்க்கரை வியாதி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து தீவிர முயற்சியில் இறங்குகிறார் சரவணன்.

விளம்பரம்

தி லெஜெண்ட் முழு திரை விமர்சனம் இதோ - ரேட்டிங் 2/5 3

அவரின் இந்த முயற்சிக்கு எதிரிகள் தொடர்ந்து தடைகளை உருவாக்கி வருகின்றனர். அந்த தடைகளை எல்லாம் முறியடித்து அவர் சர்க்கரை வியாதியை முற்றிலும் ஒழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் பாசிட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது, முதல் படத்திலேயே அனைவரையும் கவரும் வண்ணம் சரவணன் அருள் நடித்துள்ளார். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட், தனது வயதையும் மீதி நடனம் என அனைத்திலும் தன்னுடைய 100% முயற்சியை அவர் கொடுத்துள்ளார். வழக்கம் போல சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் காமெடியும், யோகி பாபுவின் காமெடியும் ரசிக்கும் படியாக இருக்கிறது. மேலும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், இசையும் படத்தை ஒரு படி மேலே கொண்டு செல்கின்றன.

விளம்பரம்
தொடர்புடையவை  மீனா கணவர் எப்படி இறந்தார்ன்னு உங்களுக்கு தெரியுமா? கொஞ்சம் சமூக அக்கறையோடு இருங்க..மீடியாக்களை விளாசிய குஷ்பூ

தி லெஜெண்ட் முழு திரை விமர்சனம் இதோ - ரேட்டிங் 2/5 5

படத்தின் குறைகளாக சொல்லப்படுவது தேவையில்லாத ஆக்ஷன் காட்சிகள், மற்றும் இடையிடையே சம்பந்தமில்லாமல் பாடல் காட்சிகள் என்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்திற்கான எடிட்டிங் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சில ஆக்ஷன் காட்சிகளில் சொதப்பியும் இருக்கிறார் சரவணன். வில்லனாக வந்த சுமன் வழக்கம் போல் தனது வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்து இயக்கத்திலும் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதே நிதர்சனம். இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சர்க்கரை வியாதிக்கு குறைந்த விலையில் மருந்து கண்டுபிடித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல கதை அம்சத்துடன் கூடிய கதையை தி லெஜண்ட் டீம் சொதப்பி உள்ளார்கள் என்பதே உண்மை. மொத்தத்தில் இந்த லெஜெண்ட் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

விளம்பரம்

தி லெஜெண்ட் முழு திரை விமர்சனம் இதோ - ரேட்டிங் 2/5 7

விளம்பரம்

Leave a Comment