Categories: சினிமா

கண்டிப்பா தியேட்டர்ல்ல போய் பாருங்க.! படம் சூப்பரா இருக்கு.! டாடா படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.!

வெளியிட்டது

இன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் டாடா திரைப்படம் தற்போது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து விமர்சனங்களை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தற்போது கூறியிருக்கிறார். பிக்பாஸில் கலந்துகொண்ட பிறகு கவினுக்கு சில படங்கள் கிடைத்து வருகிறது. நட்புனா என்னனு தெரியுமா? லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார் கவின். இந்த நிலையில் அவர் வித்தியாசமான கதையை மையப்படுத்தி டாடா என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருக்கிறார். இந்த படம் குறித்து பார்த்தோமானால் கவினும், அபூர்ணதாஸும் கல்லூரி கால நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறி, அந்த காதல் எல்லை மீறி கர்ப்பம் வரை செல்கிறது. இதனால் அபர்ணாதாஸ் கர்ப்பமாகிறார். இதனால் இருவரையும் வீட்டில் இருந்து துரத்தி விடுகின்றனர். பின்னர் வாடகை வீட்டில் வசித்து வரும் அவர்களுக்குள் ஒரு சிறு சண்டை ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பா தியேட்டர்ல்ல போய் பாருங்க.! படம் சூப்பரா இருக்கு.! டாடா படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.! 1

பிரசவ வலியில் துடிக்கும் மனைவியை விட்டுவிட்டு கவின் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சென்று விடுகிறார். பின்னர் வந்து பார்க்கும் அவர் மருத்துவமனையில் குழந்தை மட்டும் இருக்கிறது. மனைவி அபர்ணாதாசை காணவில்லை. பின்னர் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து தனி தகப்பனாக இருந்து வளர்க்கும் அவர் படும் கஷ்டங்களை இந்த படம் எடுத்துக் காட்டி இருக்கிறது. மீண்டும் அந்த மனைவியுடன் கவின் இணைந்தாரா? பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்த நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பேசி இருக்கும் ப்ளூ சட்டை மாறன் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் கணிக்கும் விதமாகத்தான் படம் இருந்தது. கிளைமாக்ஸ் எப்பொழுது வரும், க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கும்? இன்டெர்வல் எப்போது வரும்? ஆகிய அனைத்தையும் கணிக்க கூடிய வகையில் இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சிகளையும் மிக சுவாரஸ்யமாக எடுத்து இருந்தார்கள் அதுதான் இந்த படத்தின் வெற்றி என்று ஆரம்பித்தார்.


அப்பா சென்டிமென்ட் என்கிற பெயரில் நெஞ்சை நக்காமல், சீரியஸ் காட்சிகளை கூட காமெடியாக கொண்டு எடுத்து இருந்தார்கள். அதுதான் படத்தின் சுவாரசியத்திற்கு மற்றொரு காரணமாக இருந்தது. ஆனாலும் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தது. கர்ப்பமான பின்பு பெண் வீட்டில் விலக்கி வைத்தது கூட ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் பையன் வீட்டில் எதற்காக விலக்கி வைத்தார்கள் என்பது குறித்து எல்லாம் சரியான விளக்கம் இல்லை. மேலும் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருந்தது. ஹவுஸ் ஓனர் பிரண்டாக வரும் ஒருவரும், ஐடி கம்பெனியில் வரும் ஃப்ரண்டவும், டிடிவி கணேஷ் கதாபாத்திரமும் மிக அருமையாக இருந்தது. இந்த படம் களத்தூர் கண்ணம்மா போல எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் வித்தியாசம் காட்டி தற்போது மிக அருமையாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று பாசிட்டிவ் விமர்சனங்களை கூறினார். அவரது முழு விமர்சனத்தை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Video Below..!

 

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்