லியோ படத்தின் டைட்டில் டீசருக்காக வெறித்தனமாக கம்போஸ் செய்யும் வீடியோவை தற்போது அனிருத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வாரிசு படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லியோ என்கிற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இதற்காக படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது. படக்குழு சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றுள்ளது. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் வெளியானபோது டைட்டிலை ஒரு சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். அதேபோல இந்த படத்திற்கும் டைட்டில் டீசருடன் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதேபோல பிப்ரவரி 3ஆம் தேதி குட்டி டீசர் ஒன்றை வெளியிட்டு படத்தின் பெயர் லியோ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த டீசரை பார்க்கும்பொழுது படம் ஆக்ஷன் பிளாக் படமாக இருக்கும் என்று தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சாக்லேட் ஃபேக்டரி ஒன்றில் சாக்லேட்டையும் கத்தியையும் ஒரு சேர செய்து கொண்டிருக்கிறார் விஜய். அப்போது அவரை தேடி அங்கு வில்லன் கும்பல் ஒன்று வருகிறது. பின்னர் கத்தியை எடுத்த அவர் சாக்லேட் குழம்பில் முக்கி எடுத்து அதை சுவைத்து விட்டு “பிளடி ஸ்வீட்” என்று கூறுகிறார். இந்த அதிரடி காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசை மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.அந்த டைட்டில் அறிவிக்கும் டீசர் வீடியோவை மட்டும் இதுவரை 38 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்த நிலையில் பின்னணியில் ஒலிக்கும் அந்த பாடலை அனிருத் மற்றும் சித்தார்த் இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடலை ஹெய்சன் பர்க் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது இந்தப் பாடலுக்கு அனிருத் கம்போஸ் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை தற்போது அனிருத்தே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்த அனிருத், பிளடி ஸ்வீட் என்று சொல்லி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை ஹேஷ்டேக் செய்து பகிர்ந்து இருக்கிறார். மேலும் நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி என்றும் பகிர்ந்து இருக்கிறார். மேலும் தனது மியூசிக் குழுவிற்க்கும் அவர் நன்றி சொல்லி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O