Categories: சினிமா

தசாவதாரம் 2-ல் நடிக்க உள்ளாரா கமல்? கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பு | Dasavatharam

வெளியிட்டது

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பிற்கு மற்றொரு மணிமகுடமாக திகழ்ந்த ஒரு படம்தான் தசவாதாரம். நடிப்பில் அவரை மிஞ்ச ஒரு ஆள் இனி பிறந்து தான் வர வேண்டும் என்ற அளவுக்கு நடிப்பில் அசத்தியிருப்பார். படத்தின் இறுதியில் 10 வேடங்களை மேக்கப் போடும் வீடியோவை மட்டும் பல மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியாகி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று இருந்தது இந்த திரைப்படம் . இந்த படத்தின் வசூல் கோடிக்கணக்கை தாண்டி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தசாவதாரம் 2-ல் நடிக்க உள்ளாரா கமல்? கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பு | Dasavatharam 1

 

நெப்போலியன், நாகேஷ் போன்ற பல முண்ணனி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் நெப்போலியன் குலோத்துங்க சோழனாக கமலை கடலில் தூக்கிப் போடும் காட்சிகளும், பாடல்களும் இன்று பார்த்தால் கூட மெய் சிலிர்க்க வைத்துவிடும். இந்த படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமாரும், கமலும் கடின உழைப்பை கொடுத்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ரவிக்குமாரை தொடர்ந்து கேட்டு வந்தனர். மேடை ஒன்றில் பேசும் போது பதிலளித்து பேசிய ரவிக்குமார், ஒரு முறை கமலை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது தசவதாரம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூற, இவ்வளவு வருடம் ஆகிவிட்டதா என்று கமல் ஆச்சரியத்துடன் கூறினார். Youtube Video Code Embed Credits: Cineulagam

மேலும் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் அப்படி ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் எங்களால் எடுக்கவே முடியாது என்றும், அந்த படத்திற்காக கமலும் நானும் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்றும் கூறினார். ஹாலிவுட் படங்களைப் போல இந்திய சினிமாவிலும் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் தசவதாரம் போன்ற வெற்றிப் படங்கள் இரண்டாவது பாகத்தை வெளியிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை நிராகரித்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்