மக்களை வென்றானா வேட்டையன்..! திரை விமர்சனம்..!

இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் படம் வேட்டையன். இப்படத்தில் இவருடன் ராணா,பகத் , அமிதாப்பச்சன், மஞ்சு வாரியார் என பலரும் நடித்து உள்ளனர். அனிருத் இசையில் உருவாகி உள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

மக்களை வென்றானா வேட்டையன்..! திரை விமர்சனம்..! 1

விளம்பரம்

படத்தின் கதை

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக வருகிறார் ரஜினிகாந்த். என்கவுண்டர் மூலம் அனைத்தையும் தீர்த்து வைத்துவிடலாம் என்பது மட்டுமே ரஜினியின் குறிக்கோளாக இருக்கிறது. அதே சமயம் என்கவுன்டருக்கு எதிரானவராக வருகிறார் அமிதாப்பச்சன். சென்னையில் வேலைக்கு வரும் துஷாரா அங்கு அசல் கோலாரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொல்லப்படுவது போல காட்டுகிறார். துஷாராவை கொன்ற அசலை என்கவுண்டர் செய்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அசல் அந்த கொலையை செய்யவில்லை எனவும், ரஜினிகாந்த் தப்பான என்கவுண்டர் செய்ததாக கூறுகிறார். இதனால் துஷாராவை கொன்றது யார் என ரஜினி தேட தொடங்குகிறார். இதுதான் படத்தின் மீதி கதையாகும்.

விளம்பரம்
தொடர்புடையவை  அதிதி ஷங்கருடன் இணைந்து மாவீரன் செட்டில் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.! இதோ வீடியோ

மக்களை வென்றானா வேட்டையன்..! திரை விமர்சனம்..! 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

வழக்கம் போல நடிகர் ரஜினிகாந்த் தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் படத்தை தாங்கி இருக்கிறார். போலி என்கவுண்டர் மற்றும் எண்டரன்ஸ் தேர்வில் நடக்கும் குளறுபிடிகள் குறித்து இயக்குனர் அருமையாக காமித்து இருப்பதற்கு அவருக்கு பாராட்டுக்கள். படத்தில் திருடனாக வரும் பகத் பாசில் எல்லா இடங்களிலும் ஸ்கொர் செய்து விடுகிறார்.படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்து உள்ளனர். ஆரம்பத்தில் கிரைம் திரில்லர் போல நகரும் கதையை, முழுவதுமாக சோசியல் கருத்தாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர். ரஜினி போன்ற உச்ச நட்சத்திரம் இந்த கதையில் நடித்து இருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்து இருக்கிறது.அனிருத் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்து இருக்கிறது. வில்லனாக வரும் ராணாவிற்கு இன்னும் அழுத்தம் கொடுத்து இருந்தால் படம் நன்றாக வந்திருக்கலாம் என உணரவைக்கிறது. சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும், அதனை ரஜினி தனக்கான இடங்களாக மாற்றி அசத்தி இருக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகள் தொடங்கி எல்லா காட்சிகளையும் இயக்குனர் ரசித்து ரசித்து எடுத்து இருப்பதை கண்டுகொள்ள முடிகிறது. மொத்தத்தில் வேட்டையன் மக்கள் மனதில் வேலை செய்வான்.

விளம்பரம்

Leave a Comment