“தளபதி பிறந்தநாளுக்கு டான்ஸ் ஆடாம எப்படி”!! பீச்சில் நடனமாடி தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய டிடி!!

வெளியிட்டது

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவின் மிக முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தமிழகம், கேரளம், ஆந்திர என அனைத்து மாநிலங்களிலும் இவருக்கென தனியாக மிக பெரிய ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. நடிகர் மட்டுமின்றி, நல்ல பாடகராவும், நல்ல நடனம் ஆட தெரிந்த நடிகராக அனைத்து வயதினருக்கும் மிக பிடித்த நாயகனாக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"தளபதி பிறந்தநாளுக்கு டான்ஸ் ஆடாம எப்படி"!! பீச்சில் நடனமாடி தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய டிடி!! 1

கலவையான விமர்சனம் பெற்றாலும் இவருடைய படங்கள் எளிதாக 200 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. பல நல்ல விமர்சங்களை பெற்றாலும் முன்னணி நாயகர்கள் சிலரால் கூட இந்த வசூலை எட்ட முடியாத நிலை உள்ளது. இதற்கு சான்று அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,வி.டி.வி கணேஷ் என பலர் நடித்த இந்த படம் மிகவும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் இந்த ஆண்டின் இப்போதைய அதிக வசூல் செய்த தமிழ் படமாக 230 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்துளளது இந்த படம்.

விஜய் கேரளாவிலும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அதே போல இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவர் தன்னுடைய அடுத்த படமான “T66” படத்தில் பணியாற்றும் பலரையும் தெலுங்கில் அதிகம் அறியப்பட்டவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரான வம்ஷி படிப்பள்ளியுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.

இவர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான “மஹரிஷி” என்ற 2019ஆம் படத்திற்காக சிறந்த முழு பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றவர் ஆவார். அதே பெரிய தயாரிப்பாளரும், விநோயிகிஸ்தருமான ‘தில்’ ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இவர்கள் மட்டுமின்றி இப்பொது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நாயகியான ரஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், காமெடி நடிகர் பிரமானந்தம், துணை நடிகர் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் என நிறைய தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான, பரிட்சியமான முகங்கள் படத்தில் பலர் உள்ளனர்.

ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் செட் அமைத்து துவங்கிய படப்பிடிப்பு இப்பொது சென்னையில் 2வது கட்டப்படப்பிடிப்பை துவங்கியுள்ளது. துவங்கிய முதலே படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. இப்பொது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை குஷ்பூ, ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜயின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் படக்குழு அதனை குறித்து எந்த வித அச்சமும் இன்றி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்முரமாக நடந்து வருகிறது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கொண்டு வர ஆயுதமாகி வருகிறது படக்குழு. இதனால் விரைவில் அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகளையும் மேற்கொள்ள தயராகிருக்கிறார்கள்.நேற்று முதல் போஸ்டர் வெளியாகிய நிலையில்  தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு பரிசாக “தளபதி 66” படக்குழு, அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டது.

இது மட்டுமின்றி திரை துறையை சேர்ந்த பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன் துவங்கி ராகவா லாரன்ஸ் வரை விஜய்க்கு பிறந்தநாள் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நட்சத்திர தொகுப்பாளினியாக டிடி’யும் விஜய்க்கு இப்பொது வாழ்த்து கூறியுள்ளார். அனால் கொஞ்சம் வித்தியாசமாக. விஜயின் “ஜாலியோ ஜிம்கானா” பாடலுக்கு பீச்சில் நடனம் ஆடி தன்னுடைய வாழ்த்தை அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ நீங்களும் காண….

Video Courtesy – Behindwoodstv.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்