தென்னிந்தியாவின் மிக ஏப்ரியா நட்சத்திரமாக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருடைய படங்கள் அடுத்தடுத்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். படம் சுமாராக இருந்தால் இவருடைய ஸ்டார் இமேஜ் படத்தை கோடிகளை தாண்டி வசூல் ஈட்ட வைக்கிறது.

அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் 200 கோடியை தாண்டி வசூல் கொடுத்தது. இதுவே அவருடைய இன்றைய ஆளுமையை திரையுலகில் காட்டுகிறது. இந்த ஆண்டின் இப்போதைய அதிக வசூல் செய்த படமாக “பீஸ்ட்” தான் நீடிக்கிறது. அடுத்ததாக தன்னுடைய 66வது படத்தில் தென்னிந்தியாவின் மற்றொரு முக்கிய மார்க்கெட்டான தெலுங்கு திரை உலகை விஜய் குறி வைத்துள்ளார்.
அதற்கான பணிகளில் அவர் இறங்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் மிக பெரிய தயாரிப்பாளர் “தில்” ராஜு தயாரிப்பில், முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்ஷி படிப்பள்ளி இயக்க, முன்னணி தெலுங்கு நட்சத்திரங்கள் ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிராம்மானந்தம் என பலர் நடிக்க இந்த படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலுள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் வியாஜியின் வீடு சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளது. இப்பொது தன்னுடைய ஆபீஸை கொஞ்சம் புதுப்பிக்க நினைத்துள்ள நடிகர் விஜய், அதற்காக முதல் கட்டமாக பைண்டிங் பணிகளை மேற்கொள்ளும் படி உதவியாளருக்கு அறிவுரை கொடுத்துள்ளார். இதன் பேரில் கடந்த சில நாட்களாகவே அவருடைய அலுவலகத்தில் அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு பணியில் பல பெயிண்டர்கள் பணிபுரிந்து வந்து இருக்கிறார்கள் இதில் பிரபாகரன் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று எப்பொழுதும் போல வேலை முடிந்து வீட்டிற்கு செல்லாத இவர், மது அருந்திவிட்டு அங்கேயே கொஞ்சம் நேரம் இருந்துள்ளார். நண்பர்கள் பரோட்டா வாங்கிக்கொடுத்து சாப்பிட்டு விட்டு வீடு செல்லும் படி அறிவுறுத்தி விட்டு, சென்றுள்ளனர்.
காலையில் வந்து பார்த்த பொது அங்கே, பிரபாகரன் கையிலும் வாயிலும் கொஞ்ச பரோட்டா இருக்க படுத்த நிலையில் பிணமாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள சக பணியாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு செய்தி அனுப்ப, போலீஸ் விரைந்து வந்து சம்பவ இடத்தில விசாரணை நடத்தி வருகிறார்கள்.