Categories: சமூகம்

‘புல்புல்’ புயலால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

வெளியிட்டது
'புல்புல்' புயலால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு! 1

வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாக மாறி கிழக்கு இந்தியாவை புரட்டி எடுத்த புல்புல் (Bulbul) புயல், மேற்குவங்க மாநிலம் மற்றும் வங்கதேசம் நாட்டை ஒட்டிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்தது. அப்போது, கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், கன மழையும் பெய்தது.

மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாபூர் பகுதியில் வீசிய காற்றால் 900-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் , மின்கங்களும் சாய்ந்து மின்துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மீட்பு படையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

புயல் மழை காரணமாக 60,000 மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 4,65,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1, 78, 000 பேர் இடம் மாற்ற பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக 471 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, புல்புல் புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது . பலத்த காற்றுடன் மழை பெய்யதால் மரங்கள் சாய்ந்து, குடியிருப்புகள் சேதமாகின. மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் மூழ்கின. புயல் பாதிப்பு குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.இதற்கிடையில், வங்கதேச தலைநகர் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் புல்புல் புயல், கரையை கடக்கும் போது, 7 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்தன. தொடர்ந்து கனமழை பெய்ததால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

5,000 முகாம்கள் அமைக்கப்பட்டு 14 லட்சம் பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆனது. ஒடிசாவில் 2 பேர், வங்கதேசத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புல்புல் புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 அதிகரித்து வருகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்