சபரிமலை மறுசீராய்வு வழக்கில் விசாரணை இல்லை!

சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொள்ளப்போவதில்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் தளத்திற்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் சென்ற பெண்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

விளம்பரம்
சபரிமலை மறுசீராய்வு வழக்கில் விசாரணை இல்லை! 1
சபரிமலைக்கு செல்லும் பெண்கள்.

இந்த சூழலில், தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவமபர் 14ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

விளம்பரம்

இந்நிலையில் சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்து இன்று விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று விசாரணையை தொடங்கிய தலைமை நீதிபதி பாப்டே, சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று அறிவித்தார். மேலும், சபரிமலை விவகாரத்தில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளைத் தான் விசாரிக்க இருக்கின்றோம். கோயில் மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்தா என்பதை தெரிந்துகொள்ள விருக்கிறோம் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment