Categories: அரசியல்

போராட்ட களத்தில் மாணவர்களை சந்தித்த தீபிகா படுகோனே!

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தீபிகா படுகோன் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்த குண்டர்களால் ஜவகர்லால் நேரு இடசாரி மாணவர்கள் தாக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. குண்டர்களின் தாக்குதலில் பாஜக இருப்பதாகவும், காவல்துறையினர் மறைமுகமாக வன்முறை சம்பவங்களை ஆதரிப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது.

இப்படியான அராஜக போக்கை கண்டித்து இன்று முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை பல்வேறு தரப்பினர் சந்தித்து பேசி வருகிறார்கள்.

போராட்ட களத்தில் மாணவர்களை சந்தித்த தீபிகா படுகோனே! 1
போராட்ட களத்தில் மாணவர்களை சந்தித்த தீபிகா படுகோனே.

குறிப்பாக தமிழ்நாட்டு எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான தீபிகா படுகோன் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வழக்கத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்த தீபிகா சுமார் 15 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்