வரும் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் முதலீடுகள் குறைந்து போனது மற்றும் மக்களிடையே சோர்ந்து போன நுகர்வு தன்மை ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் உறைந்து போய்யுள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக தங்களது மதிப்பீட்டினை பல்வேறு நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன் படி சர்வதேச நிதியம் ஆணையம் தனது மதிப்பீட்டை 5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றது. அதேபோல ரிசர்வ் வங்கியும் தற்போதைய வளர்ச்சி மதிப்பு 6.1 சதவிகிதமாக இருக்குமெனவும், வரும் நிதியாண்டில் 5 சதவிகிதமாக இருக்குமெனவும் குறைத்துள்ளது.
மத்திய புள்ளியில் அலுவலகத்தின் தரவுகள் படி, இந்தியாவின் மொத்த மதிப்பு சேர்ப்பு 4.9 சதவிகிதமாக வளர்ச்சியடையும் எனவும், அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவிகிதமாக இருக்குமெனவும் கணித்துள்ளது.