Categories: அரசியல்

மாணவர்கள் மீதான தாக்குதல் வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை தவறாக கிராமியப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அப்போது ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் மீதான தாக்குதல் வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு 1
ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்

இதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற 12க்கும் மேற்பட்ட மாநில தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து டெல்லி காவல்துறையின் செயலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கினை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் கோரியும்,அமைதி வழியில் போராடும் மாணவர்களை கைது செய்ய தடையும், பாதுகாப்பும் கோரப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தோடு, மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்