டெல்லி நகரம் முழுக்க இலவச வை-ஃபை வசதி

டெல்லியில் துண்டிக்கப்பட்ட இணைய சேவைகளுக்கு மாறாக நகரம் முழுக்க இலவச வை-பை திட்டத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடங்கியுள்ளார்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை முதன்மை மாநிலமாக டெல்லி இருக்கிறது. டெல்லியில் இயக்கிவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதிலிருந்து போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

விளம்பரம்

இதனால் இன்று வெள்ளி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அம்மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி தலை நகரம் முழுக்க இலவச வை-ஃபை வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.

டெல்லி நகரம் முழுக்க இலவச வை-ஃபை வசதி 1
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள வை-ஃபை

“டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக இணைய சேவைகளை அதிகாரிகள் துண்டித்தது முரண்பாடான செயலாகும்” என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

விளம்பரம்

டெல்லி முழுக்க 11 ஆயிரம் இலவச வை-ஃபைகள் நிறுவப்பட்டுள்ள. பேருந்து நிறுத்தங்களில் 4,000; பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் 7,000 வை-ஃபைகளும் நிறுவப்பட்டுள்ளது. மொபைல் சேவைகளையும், இணைய சேவைகளையும் தடை செய்துவிட்டால் போராட்டத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்ட மத்திய அரசிற்கு பலத்த அடியாக இது அமைந்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment