Categories: சினிமா

ஜெயிச்சிட்டோம் மாறா..! டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் அருள்நிதி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள் ஒரு சிலரே உள்ளனர். அப்படி இருக்கும் நடிகர்கள் பட்டியலில் கட்டாயம் நடிகர் அருள்நிதி பெயர் இருக்கும். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை மகிழ்விப்பதில் இவர் வல்லவர். அப்படி இவர் தேர்ந்தெடுத்த டைரி , டி பிளாக் , போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து உள்ளது.

ஜெயிச்சிட்டோம் மாறா..! டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் அருள்நிதி..! 1

தற்போது 2015ல் இவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகிய டிமான்டி காலனி திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து 9ஆண்டுகள் கழித்த இப்படத்தின் இரண்டாவது பாகத்தை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கிறது.

பல திரையரங்குகளில் இப்படத்திற்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அருள்நிதி மென்மேலும் வெற்றியை பெறவேண்டும் என ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை மனதார கூறி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்