Categories: சினிமா

திருச்செந்தூர் கோவிலுக்கு கட்டுகட்டாக பணத்தை கொடுத்த தேவா..! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

சூரியனின் வெளிச்சத்தில் நிலவும் நட்சத்திரங்களும் தெரிவதில்லை. ஆனால் இரவு நேரங்களில் நிலவும் நட்சத்திரங்களும் மனதிற்கு அமைதியை கொடுக்கும். அது போலத்தான் தேவாவும். 80, 90களில் தனது கானா இசையின் மூலம் பலருக்கு மன நிம்மதியை கொடுத்த ஒரு மிகப்பெரிய கலைஞன். 90களில் இரவு நேரங்களில் பலரது ரேடியோக்களிலும், டீக்கடைகளிலும், வாட்ச் மேன்களின் ரேடியோக்களிலும் ஒலிக்கும் பாடலாக தேவாவின் பாடல் இருக்கும். ஆற்காட்டில் பிறந்த வளர்ந்த இவர் இசையின் மீது கொண்ட தீராத காதலால் சென்னைக்கு வந்தார். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட தேவா, இசை பயில ஆரம்பித்துள்ளார். தான்சன் மாஸ்டரிம் முறையாக கர்நாடக இசையும், மேலை நாட்டு இசையும் கற்றுக் கொண்டார். பின்னர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார். பின்னர் இவர் கானா பாடல்களை திரையில் மிகப்பிரபலப்படுத்தியவர் தேவா தான். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

திருச்செந்தூர் கோவிலுக்கு கட்டுகட்டாக பணத்தை கொடுத்த தேவா..! என்ன காரணம் தெரியுமா? 1

இவர் 1983ம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தில் இசையமைத்தார். ஆனால் படம் வெளியாகிவில்லை. பின்னர் இசையமைத்த ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. பின்னர் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இசையமைத்த ஒரு படமே வெளியானது. அந்த படத்திற்குப் பின்னரே அவர் மிகவும் பிரபலமானார். பின்னர் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிதான். பின்னர் இவர் பல பக்திப்பாடல்களை பாடியுள்ளார். 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். பெரும்பாலும் முருகன் பாடல்கள் பாடி இருக்கிறார். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேவா சுவாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தேவா, திருச்செந்தூர் முருகனைப் பற்றி பல்வேறு பாடல்களை பாடி உள்ளதாக குறிப்பிட்டார். அப்போது பேசிய அவர், முருகன் பற்றி நாங்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே மிகப்பிரபலம், ‘கடலோர கந்தன் முகமே’ என்ற பாடல் ஆல்பம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார். அந்த சிடி விற்று வந்த வருமானத்தை முழுவதும் திருச்செந்தூர் முருகனுக்கே போய் சேர வேண்டும் என்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த அவர், அந்த கட்டுக்கட்டாண பணங்களை வழங்கினார். அந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த செய்தியைக் காண.. Watch the below video..

YouTube video code embed credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்