பழசை மறந்து வெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணைந்த அறிவு & சந்தோஷ் நாராயணன்.! இன்று மாலை பாடல் வெளியாகிறது

என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து தெருக்குரல் அறிவு, வெற்றிமாறன் படம் ஒன்றில் இணைந்து பணியாற்றியுள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் பேசப்படும் வரும் செய்தி தான் இது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா போட்டியில் என்ஜாய் எஞ்சாமி பாட்டு பாடப்பட்டது. ஆனால் இந்த பாட்டை எழுதி, நடித்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை, அவரது குரல் மட்டுமே ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விஷயம் பெரிதான நிலையில் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாம் தூங்கும் பொழுது நமது பொக்கிஷங்களை அபகரித்துவிடுவார்கள். உண்மையே என்றைக்கும் வெல்லும் என்று ஒரு பதிவிட்டிருந்தார். இதனால் அறிவு நிகழ்ச்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார் என்ற செய்தியை பரவியது. இதனால் நெட்டிசன்கள் பலரும் அறிவு புறக்கணிக்கப்பட்டாரா? என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீயையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

தொடர்புடையவை  நொடிக்கு நொடி திக் திக்..! பேயிடம் மாட்டிக்கொள்ளும் Jiiva மற்றும் Priya..! Black படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

பழசை மறந்து வெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணைந்த அறிவு & சந்தோஷ் நாராயணன்.! இன்று மாலை பாடல் வெளியாகிறது 1

விளம்பரம்

இதனால் ஒரு கட்டத்தில் சந்தோஷ் நாராயணன் மற்றும் தீ இருவரும் மிகப்பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தனர். அதில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக எங்கள் மூவருக்கும் உரிமை உண்டு. அதில் வரும் வருமானத்தை நாங்கள் மூவரும் சமமாக பிரித்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் அறிவு ஒரு திறமையான கலைஞர், அவர் மென்மேலும் வளர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். எந்த இடத்திலும் நாங்கள் அறிவை புறக்கணித்ததே இல்லை. அவர் வெளியூரில் இருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் கூறியிருந்ததாக இருவரும் விளக்கம் அளித்திருந்தனர். தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்திருந்த விக்னேஷ் சிவனிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, அறிவு எனக்கு நல்ல நண்பர் தான், அவர் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தார். அதனால் தான் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இது மிகவும் முக்கியமான நிகழ்ச்சி, நீங்கள் அமெரிக்காவில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருப்பி அமெரிக்கா செல்லும் செலவு வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியும், முக்கியமான நிகழ்ச்சி என்பதால் வர வேண்டும் என்று கூறியும், 100 முறை அழைத்தும் அவர் பங்கேற்க முடியவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.

தொடர்புடையவை  "நீயெல்லாம் 15 தான், நான் 17 வாட்டி பாத்துருக்கேன்"!! ரஜினியின் அந்த படத்தை நான் 17 முறை பார்த்துள்ளேன் என பேசியுள்ள விஜய்!! அந்த படத்துல விஜயும் நடிச்சிருக்காரே!!

பழசை மறந்து வெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணைந்த அறிவு & சந்தோஷ் நாராயணன்.! இன்று மாலை பாடல் வெளியாகிறது 3

விளம்பரம்

இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள வெற்றிமாறன் படத்தின் கீச்சே கீச்சே என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலமாக அறிமுகமானவர் சந்தோஷநாராயணன், இவர் வழக்கமான இசையமைப்பாளர்கள் போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் பாடல்கள் எழுதுவதால் முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. பா. ரஞ்சித்துடன் இணைந்து காலா, கபாலி, மெட்ராஸ், சார்பட்டா உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார் சந்தோஷ் நாராயணன். பா.ரஞ்சித்தும், சந்தோஷ் நாராயணனும் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் சார்பட்டா, அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது, பல இடங்களில் தனது மகள் தீயை மட்டுமே முன்னிலைப்படுத்தி தெருக்குரல் அறிவை புறக்கணித்ததாக சந்தோஷ் நாராயணன் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருந்தார் பா.ரஞ்சித். தற்போது அவர் கூறியது போலவே நடந்து வருவதால் நெட்டிசன்கள் பலரும் பா ரஞ்சித் சரியாகத்தான் கூறியிருக்கிறார் என்று கமெண்ட்களை போட்டு வந்தனர்.

தொடர்புடையவை  WWE நிகழ்ச்சியில் பங்கேற்கும் கார்த்தி? புது வீடியோவை வெளியிட்ட சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.!

பழசை மறந்து வெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணைந்த அறிவு & சந்தோஷ் நாராயணன்.! இன்று மாலை பாடல் வெளியாகிறது 5

விளம்பரம்

இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்க, வெற்றிமாறன் இயக்கி வரும் அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் கீச்சே கீச்சே என்ற பாடலை அறிவு சந்தோஷ் நாராயணன் இசையில் பாடி இருக்கிறார். அந்த பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் ஆர்யா வெளியிட இருக்கிறார். இந்தப் பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கும் இந்த படம் ஆண்ட்ரியாவின் முதன்மை நடிப்பில் வெளிவர உள்ளது. இது விரைவில் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பழசை மறந்து வெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணைந்த அறிவு & சந்தோஷ் நாராயணன்.! இன்று மாலை பாடல் வெளியாகிறது 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment