ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த தனலட்சுமி.! வைரலாகும் #saveDhana ஹேஷ்டாக்.!

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்துள்ள ஒரு செய்தி என்று சொன்னால் அது பிக்பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமியின் வெளியேற்றம் தான். தனலட்சுமி வெளியேறியதை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் தனலட்சுமி ஆதரவாளர்கள் பல ஹேஷ் டாக்குகளை போட்டு வருகின்றனர். குறிப்பாக #Savedhana #dhanadesevesbetter #dhanaunfaireviction போன்க ஹேஷ் டேக்குகள் டவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு கடுமையான போட்டியாளராக இருப்பவர் தனலட்சுமி. இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே தனது கடுமையான உழைப்பை அனைத்து டாஸ்க்கிலும் கொடுத்து வந்திருக்கிறார். மேலும் கேப்டன்சி டாஸ்க் போன்ற போட்டிகளில் இவர் பங்கேற்று முழுமையாக தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த தனலட்சுமி.! வைரலாகும் #saveDhana ஹேஷ்டாக்.! 1

கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றால் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக நாமினேஷன் ஃபிரீ சோன் கிடைக்காமல் போனதால் தனலட்சுமி நாமினேட் செய்யப்பட்டார். அமுதவாணன், மணிகண்டன், ஏடிகே ஜனனி ஆகிய நான்கு பேர் நாமினேஷன் ஃபிரீ சோனை பெற, கதிரவன், தனலட்சுமி விக்ரமன், அசீம், ரட்சிதா, மைனா, ஷிவின் ஆகிய ஏழு பேரும் நாமினேஷனில் மாட்டிக்கொண்டனர். இதில் கதிரவன் ரட்சிதா மைனா ஆகியோரின் பங்களிப்பு தனலட்சுமியை காட்டிலும் குறைந்த அளவிலேயே இருந்தது. மைனா எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டே கடந்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டை கமலஹாசனே முன் வைத்திருக்கிறார். ரட்சிதா மற்றும் கதிரவன் பற்றி கேட்கவே வேண்டாம். எந்த சண்டையிலும் தலையிடுவதே இல்லை. நியாயத்திற்காக அவர்கள் இருவரும் குரல் கொடுப்பதே இல்லை. இருவரும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இருவர் மீதும் விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ரட்சிதா மைனா கதிரவன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் வெளியேற வேண்டும் என்று பலரும் எண்ணி இருந்த நிலையில் தனலட்சுமியை பிக்பாஸ் எதிர்பாராத விதமாக வெளியேற்றி இருக்கிறது. ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு சனிக்கிழமை கலந்து கொள்ள இருந்த காரணத்தினால் வெள்ளிக்கிழமையே சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள் சூட்டிங்கை முடித்திருந்தார்கள். இதனால் வியாழக்கிழமையுடன் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, வெள்ளிக்கிழமை சூட்டிங் நடைபெற்று, வெள்ளிக்கிழமையே தனலட்சுமியை வீட்டிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.

 

இதை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் தனலட்சுமி வெளியேற்றம் நேர்மையற்ற முறையில் நடைபெற்றது என்றும், Unfair கேம் பற்றி பேசும் கமலஹாசன் unfair elimination செய்திருக்கிறார் என்றும் காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

View Comments

வெளியிட்டது

புதிய செய்திகள்