வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கோபப்பட்டு சிலரை திட்டி இருக்கும் செய்தி தற்போது கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக தளபதி என்றும் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பின்னணியை வைத்து எமோஷனல் ஸ்டோரியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. மேலும் அஜித் நடிக்கும் துணிவு படத்துடன் இந்த படம் வெளியாவதால் வாரிசு பொங்கல் vs துணிவு பொங்கல் என்று ரசிகர்கள் பொங்கலை அதகளப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடந்தது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவிற்கு பல பிரபலங்கள் வருகை தந்தனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து இசை வெளியீட்டு விழாவை கண்டு மகிழ்ந்தனர். இதுபோன்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா எங்குமே நடந்திருக்காது. பலருக்கும் உள் விளையாட்டு அரங்கிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வெளியே முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சிறு தடியடி நடத்தியும் கலைத்தனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அது அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. வழக்கம் போல குட்டி ஸ்டோரி கூறிய தளபதி அரசியல் கலக்காமல் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாகவும் குட்டி ஸ்டோரியை கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரஞ்சிதமே பாடலைப் பாடிய பாடகி மானசி மேடையில் பாடிக்கொண்டிருந்த போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் கடுப்பான தளபதி விஜய் தானே மைக்கை எடுத்துக்கொண்டு மேடைக்கு சென்று அதை செக் செய்து மானசியிடம் கொடுத்திருக்கிறார், பின்னர் ஆடியோ வேலை பார்ப்பவர்களை மைக்கை கவனிக்க மாட்டீர்களா என்று கொஞ்சம் கடுமையாக கேட்டு இருக்கிறார், தளபதியின் இந்த செயலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதிலும் மேடையில் தானே மைக்கை எடுத்து சென்று கொடுத்திருக்கிறார் என்று அவரை புகழ்ந்து வருகின்றனர். தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கும் மானசி தளபதி செய்த இந்த செயலை என்னால் நம்பவே முடியவில்லை என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram