Categories: Bigg Boss Tamil 6

அப்பா இல்லை என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் ரீல்ஸ் செய்துள்ள தனலட்சுமி.! வைரல் வீடியோ

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள சர்ச்சையான போட்டியாளரான தனலட்சுமி பற்றி நாளுக்கு நாள் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் பிக்பாஸில் கதை சொல்லும் போட்டியில் சொன்ன அனைத்தும் பொய் என்று அவரது நண்பர்கள் நேற்று ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் கூறும்போது அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தனர். குறிப்பாக கதை சொல்லும் நிகழ்ச்சியின் போது தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படும் குடும்பம், தனது தாயின் செயினை விற்றுதான் பிக்பாஸ்க்கு வரும் முன்னர் துணிகள் வாங்கி வந்ததாக தனலட்சுமி கூறியிருந்தார். மேலும் தனக்கு தந்தை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதையெல்லாம் அவரது நண்பர்கள் மறுத்து இருந்தனர். டிக்டாக் செயலி மூலமாக பிரபலமானவர் தனலட்சுமி. இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார்.

அப்பா இல்லை என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் ரீல்ஸ் செய்துள்ள தனலட்சுமி.! வைரல் வீடியோ 1

இந்த முறை பிக்பாஸில் மக்களில் இருந்து இரண்டு பேரை எடுத்து உள்ளே அனுப்பி இருந்தனர். அதில் ஒருவர் திருநங்கை சிவின் மற்றொருவர் தனலட்சுமி. தனலட்சுமி பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே அடிதடி, சண்டை என்று மிகவும் பரபரப்பான போட்டியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தனலட்சுமி இரண்டு படங்களை சொந்த செலவில் தயாரித்திருப்பதாகவும், 12000 ரூபாய்க்கு செருப்பு வாங்கும் அளவிற்கு அவர் மிகப்பெரிய பணக்காரி என்றும், தான் தயாரித்த படங்களை பிரமோஷன் செய்வதற்காக டிக்டாக் பயன்படுத்திக் கொண்டிருந்த பலருக்கும் விருது வழங்கும் விழாவை கூட அவர் நடத்தி இருந்தார் என அவரது நண்பர்கள் பேசி இருந்தனர். மேலும் தனக்கு தந்தை இல்லை தாய் மட்டுமே எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தார் என்று பிக்பாஸில் கூறியது அனைத்தும் பொய், அவருக்கு தந்தை இருக்கிறார் அவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். என்று அவரது நண்பர்கள் கூறியிருந்தனர்.

மேலும் தந்தையுடன் எடுத்துள்ள சில வீடியோக்களை அவரே பகிர்ந்து இருக்கிறார் அதை சென்று பாருங்கள், என்று தனலெட்சுமியின் நண்பர்கள் கூற பலரும் தனலட்சுமியின் சமூக வலைதள பக்கத்தில் தேட ஆரம்பித்தனர். அதில் அவரது தந்தையுடன் இணைந்து அவர் ரீல்ஸ் வீடியோக்களை செய்து இருக்கிறார். இதனால் பிக்பாஸில் தனலட்சுமி சொன்ன அனைத்தும் பொய் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பிக்பாஸில் இருந்த போது தனக்கு சிகரெட் என்றால் என்னவென்றே தெரியாது, நான் அதை பார்த்தது கூட இல்லை என்று பேசி இருந்தார். ஆனால் இன்ஸ்டாகிராம் ரீல்சில் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். இதுபோல் தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள தொடர்ந்து தனலட்சுமி முயற்சி செய்து வருகிறார். ஆனால் நெட்டிசன்கள் அவரது வீடியோக்களை ஆதாரங்களாக எடுத்துப் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்