வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல் ஷூட்டிங் சென்ற ஆலியா.! வழியனுப்பி வைத்த சஞ்சீவ் !

சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆலியா மானசா ஷூட்டிங்க்கு திரும்பி இருக்கிறார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் சின்ன திரையில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது, ராஜா ராணி பாகம் இரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறக்கும் தருவாயில் அந்த தொடரை விட்டு விலகி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல் ஷூட்டிங் சென்ற ஆலியா.! வழியனுப்பி வைத்த சஞ்சீவ் ! 1

விளம்பரம்

குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அவர் எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர் சீரியலில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவியில் ஒரு சீரியலில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருப்பதால், கணவருடன் மற்றொரு சீரியலில் அவர் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் குழந்தை பிறந்ததால் உடல் எடை ஏறி காணப்பட்டதால், அவர் நடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடல் எடையை குறைத்து விட்டு சீரியலில் நடிப்பேன் என்று சபதம் எடுத்து, கடுமையாக பயிற்சி செய்து இரண்டு மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்து விட்டார் ஆலியா.

தொடர்புடையவை  விக்ரம் பட நடிகை காயத்ரியுடன் காதலா? விளக்கம் கொடுத்த ஸ்டாண்ட் அப் காமெடியன்.!

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல் ஷூட்டிங் சென்ற ஆலியா.! வழியனுப்பி வைத்த சஞ்சீவ் ! 3

விளம்பரம்

தற்போது அவர் மீண்டும் நாடகங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். வெகு நாட்களுக்கு பிறகு இன்று முதல் நாள் சூட்டிங்க்கு ஆலியா கிளம்பி இருக்கிறார். ஆனால் எந்த தொலைக்காட்சியில் நடிக்கிறார்? யாருடன் நடிக்கிறார்? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஷூட்டிங்க்கு கிளம்பும் முன் தனது கணவருடன் அவர் பேசும் வீடியோவை தற்போது அவரே சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment