அசீம் அண்ணா தப்பான எண்ணத்துல தள்ளவே இல்ல.! விக்ரமன் தான் அப்யூசர்.! திட்டி தீர்த்த தனலட்சுமி.!

வெளியிட்டது

அசீம் அப்யூசர் என்றால் விக்ரமனும் அப்யூசர் தான் என்றும் அவர் என்னை தவறான எண்ணத்தில் அப்படி தொடவே இல்லை் விக்ரமன் தான் அப்யூசர் என்று தனலட்சுமி பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர் அசீம் பற்றியே பெருமையாகவும், விக்ரமன் பற்றி காட்டமாகவும் பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் நெருங்கி வரும் வேளையில் தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர். எந்த பிக்பாஸ் சீசனிலும் இல்லாத அளவிற்கு ஒரு டைட்டில் வின்னர் இந்த அளவிற்கு வறுத்தெடுக்கப்படுவது இந்த முறையாகத்தான் இருக்கும். ஏனென்றால் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சண்டை போட்டும் ஒருமையில் பேசியும் தரக்குறைவாக நடத்தியும் வந்தார் அசீம்.

அசீம் அண்ணா தப்பான எண்ணத்துல தள்ளவே இல்ல.! விக்ரமன் தான் அப்யூசர்.! திட்டி தீர்த்த தனலட்சுமி.! 1
இது வீட்டில் உள்ளவர்களை மட்டுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு கட்டத்தில் மனம் மாறி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அதே வேலையை செய்தார் அசீம். எனவே அசீம் டைட்டில் வெற்றி பெற மாட்டார் என்று பலரும் எண்ணி இருந்த நிலையில் அவர் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். அசீமால் தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளான தனலட்சுமி, ஆயிஷா போன்ற பெண்களும் அசீமை ஆதரிக்க தொடங்கினர். இந்த மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் டைட்டில் வென்ற பின்பு அசீம் மீதான விமர்சனமும் விஜய் தொலைக்காட்சி மீதான விமர்சனமும் அதிகரித்தது.விஜய் தொலைக்காட்சி ஒருதலைப் பட்சமாக ஒரு தவறான முன்னுதாரணமாக அசீமுக்கு டைட்டில் கொடுத்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் பேட்டி ஒன்றை அளித்திருக்கும் தனலட்சுமி அசீன் குறித்து பெருமையாக பேசியிருக்கிறார். தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றிற்கு அசீமை அழைத்து பேட்டி கொடுக்க செய்திருந்தனர். அப்போது அசீமிற்கு சர்ப்ரைஸ் ஆக தனலட்சுமி உள்ளே அழைத்தனர். உள்ளே வந்து பேசிய தனா விக்ரமன் குறித்து சில காட்டமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பொம்மை டாக்கில் அசீம் தன்னைப் பிடித்து தள்ளியபோது அந்த வேகத்தில் தனக்கு கோபம் வந்தது. அதை விக்ரமன் அப்யூஸ் என்கிறார், அதே டணல் டாஸ்க்கில் தன் காலை பிடித்து விக்ரமன் இழுத்தார். அப்போது அது உனக்கு அப்ப்யூஸ் ஆக தெரியவில்லையா? அப்பொழுது நான் சின்ன பெண்ணாக தெரியவில்லையா? உனக்கு தேவை என்றால் மட்டும் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வீயா என்று விக்ரமனை பார்த்து காட்டமான கேள்விகளை எழுப்பினார். அடுத்தவர்களுக்கு என்றால் அது அப்யூஸ் என்று சொல்வீர்களா என்று காட்டமாக கேட்டார்.

மேலும் இந்த முறை பிபி கொண்டாட்டத்திற்கு தான் சென்றபோது விக்ரமன் இருந்த பக்கம் கூட நான் திரும்பவில்லை. அவரது முகத்தை கூட தனக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றும் பேசினார். வெளியே வந்து கூட அவர் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார் அந்த கேமுக்குள் போக தனக்கு விருப்பம் இல்லை என்றும் தனலட்சுமி பேசினார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்