போனை தொலைத்த மன கஷ்டத்தில் விராட் கோலி போட்ட பதிவு.! கிண்டல் செய்த டெலிவரி நிறுவனம்.!

புதிதாக வாங்கி பிரித்து கூட பார்க்காத தனது புது செல்போனை காணவில்லை என்று விராட் கோலி போட்ட ட்வீட்டிற்கு அவரை கலாய்த்து zomato நிறுவனம் நான் போட்ட பதிவு தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக இருப்பவர் விராட் கோலி. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்திருக்கிறார் விராட் கோலி. இது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து பல போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார் கோலி. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அவர் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது மனைவியுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டு அது தொடர்பாக புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களிப் பகிர்ந்து வந்தார். தற்போது மீண்டும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்திருக்கிறார்.

தொடர்புடையவை  அலப்பறை செய்யும் வடிவேலு...தாங்கமுடியாமல் சிரிக்கும் ராகவா லாரன்ஸ்"!!"சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்"

போனை தொலைத்த மன கஷ்டத்தில் விராட் கோலி போட்ட பதிவு.! கிண்டல் செய்த டெலிவரி நிறுவனம்.! 1

விளம்பரம்

டெஸ்ட் தொடருக்காக நாக்பூரில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார் கோலி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் புதிதாக போன் ஒன்றை வாங்கி இருக்கிறார். பாக்ஸை கூட திறந்து பார்க்காத நிலையில் அந்த போன் தொலைந்து போய்விட்டதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். புதிய போனை வாங்கிய பின்பு, அந்த பாக்ஸை கூட பிரிக்காத நிலையில் அது தொலைந்து போவது போன்றது மாதிரியான சோகமான பீலிங்கை விட வேறு எதுவும் இருக்க முடியாது என்று பதிவிட்டு இருந்தார். மேலும் நீங்கள் யாராவது அதை பார்த்தீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த ட்வீட்டிற்கு பலரும் பதில்களை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் அவரது ட்வீட்டிற்கு கீழே கருத்து தெரிவித்திருக்கும் பிரபல தனியார் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனம் விராட் கோலியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு இருக்கிறது. அந்த பதிவு தற்போது இணையத்தில் பேச பொருளாக இருக்கிறது. விராட் கோலி தனது மொபைலை காணவில்லை என்று சீரியஸாக கேட்கும் பொழுது உங்கள் மனைவி போனிலிருந்து ஐஸ்கிரீம் ஆர்டர் செய்யுங்கள் என்று கேலியாக பதிவிட்டு இருக்கிறது அந்த நிறுவனம்.

தொடர்புடையவை  ராதிகா சரத்குமாரின் சிறு வயது புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.!

போனை தொலைத்த மன கஷ்டத்தில் விராட் கோலி போட்ட பதிவு.! கிண்டல் செய்த டெலிவரி நிறுவனம்.! 3
உங்களது புதிய தொலைபேசி காணாமல் போன சோகத்தை மறப்பதற்காக அண்ணியின் மொபைலில் இருந்து ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து பாருங்கள் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளது. இப்படி அவர்கள் செய்வது வேடிக்கையாக இருந்தாலும் இது விளம்பர யுக்தி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் இந்தியாவே மதிக்கக் கூடிய கிரிக்கெட் வீரர் ஒருவர், சீரியஸாக பேசும் பொழுது இப்படித்தான் கேலியாக பதிவிடுவீர்களா? என்று விராட்டின் ரசிகர்கள் அந்த நிறுவனத்தை வசைப்பாடியும் வருகின்றனர். தனது உடமைகள் மற்றும் பொருட்களில் கவனமாக இருக்கும் விராட் கோலி எப்படி மொபைல் போனை தவற விட்டார் என்பது தெரியவில்லை. விளம்பர யுத்திக்காக இதுபோல மோசமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று ஜொமாட்டோ நிறுவனத்திற்கு விராட் கோலியின் ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment