“காதல் கொண்டேன்” படமான தனது முதல் தமிழ்ப்படத்திலேயே சிறப்பாக நடித்து பிரபலமானவர் நடிகை ‘சோனியா அகர்வால்’. சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். “நீ ப்ரேமிகா” தெலுங்கு படம் தான் இவரின் முதல் படமாகும். மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது பகீரா, காதலைத் தேடி நித்யா நந்தா தமிழ்ப் படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப் படுகிறது. இருந்தாலும் முன்பு போல் படங்களில் நடிக்க போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாகவும் தொடர்ந்து சீரியலில் நடிக்கவும் தீர்மானம் செய்துள்ளாராம்.இவர் ஏற்கனவே நாணல், மல்லி, தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . விஜய் டிவியின் ‘அச்சம் தவிர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.