தனது இசை மழையால் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் இசையமைப்பாளர், பாடகர் “டி.இமான்”. 15 வயதிலேயே தன் இசை பயணத்தை தொடங்கிய டி.இமான் 2002 இல் வெளியான ‘தமிழன்’ படத்திற்கு முதன்முதலில் இசையமைப்பாளரானார்.100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து பாடியுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற 5வது மியூசிக் டைரக்டர் ஆவார்.
மருது, றெக்க, மீன்குழம்பும் மண்பானையும், விசில், ஏ. பி. சி. டி, கடைக்குட்டி சிங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டு பிள்ளை எனப் பல படங்களுக்கு இசை அமைத்து அசத்தியுள்ளார்.இந்த ஆண்டில் வெளிவந்த பூமி, டெடி படத்திற்கும் இசை அமைத்தது இவரே. தற்போது அண்ணாத்த, லாபம், உடன் பிறப்பு என பல படங்களுக்கு இசை அமைத்து

வருகிறார். சன் டிவி சீரியல்களான திருமதி செல்வம், உறவுகள் இவர் தான் இசை அமைப்பாளர். இவருக்கு திருமணமாகி ப்லெசிகா, வெரோனிகா என இரண்டு மகள்கள் உள்ளனர். ப்லெசிகாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் தன் இரண்டு மகள்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் அதில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.