Categories: சினிமா

அசுரன் வெற்றிக்கு தனுஷ் தான் காரணம்

அசுரன் படத்தின் வெற்றிக்குப் பின்னால் தனுஷ் இருப்பதாக அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிவரும் அசுரன் திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார்.

அசுரன் வெற்றிக்கு தனுஷ் தான் காரணம் 1
அசுரன் “தனுஷ்”

இப்படத்தில் மஞ்சுவாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஜிவி பிரகாஷின் பின்னணி இசையிலும், வேல்ராஜின் ஒளிப்பதிவிலும் உருவாகியிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், “இப்படத்தின் வெற்றிக்கு காரணம் தனுஷ் தான். இப்படத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையை விட படத்தின் மீதும், தனுஷ் நடித்த கதாபாத்திரத்தின் மீதும் அதிக நம்பிக்கை தனுசுக்கு தான் இருந்தது. இந்த வேடத்தில் தனுஷ் மிகவும் முக்கியமானதாய் எடுத்துக் கொண்டார். இந்த விடயத்தை அவரிடமே நான் சொல்லி இருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்