சிறப்பு காட்சியாக சுறா!

இளைய தளபதி விஜய் நடித்த “சுறா” படம் கேரளாவில் சிறப்பு காட்சி வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளைய தளபதி விஜய் நடித்த படம் தான் “சுறா”. இதில் தமன்னா, வடிவேலு போன்ற முன்னனி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

விளம்பரம்
சிறப்பு காட்சியாக சுறா! 1
சுறா படத்தின் போஸ்டர்.

ஆனால் இந்த படம் இளைய தளபதியின் மோசமான படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது 10ஆம் ஆண்டினை நிறைவு செய்ய இருக்கிறது. எனவே இந்த படத்தை கேரளாவை சேரந்த கொல்லம் நண்பன்ஸ் என்ற ரசிகர் மன்றம் சார்பாக சிறப்பு கட்சியாக திரையிட முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வருகிர ஜனவரி 26, காலை 8 மணிக்கு திரையிடப்படவிருப்பதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கொல்லம் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment