Categories: சினிமா

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனுஷ் ரசிகர்கள்!!

வெளியிட்டது
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனுஷ் ரசிகர்கள்!! 1

சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகம இயக்குனராக திரையுலகில் நுழைந்தார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவனுக்கு தன் கம்பெனி சார்பில் ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஆனால், படம் முடிவதற்குள் தனுஷுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே சண்டை கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.இன்று ‘நானும் ரௌடிதான்’ படம் வெளிவந்து நான்கு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, அனிருத், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் படத்தை வெளியிட்ட லைக்கா ஆகியோரை ‘டேக்’ செய்திருந்தார்.

ஆனால், படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்த தனுஷ் பெயரை டேக் செய்யவில்லை. அதற்கு தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் விக்னேஷ் சிவனைக் கடுமையாகத் திட்டி வருகிறார்கள். நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்