தென் சீனக்கடல் பற்றிய சர்ச்சை காட்சிகள், 3 நாடுகளில் வெளியிட தடை செய்யப்பட்ட அனிமேஷன் படம்!!

தென் சீனக்கடல் பற்றிய சர்ச்சை காட்சிகள், 3 நாடுகளில் வெளியிட தடை செய்யப்பட்ட அனிமேஷன் படம்!! 1

அமெரிக்கப் பெண் இயக்குநர் ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் முதலீட்டில் ரூ.531 கோடியே 75 லட்சம்) எடுக்கப்பட்டுள்ள இந்த முழு நீள அனிமேஷன் படத்திற்கு உலக ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.ஆனால் படத்தில் ஒரு சில நொடிகளில் வரும் காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம், தென் சீனக்கடல் தொடர்பான சிறிய காட்சி தான்.

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியாக இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம்.
ஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு காலை தான் சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், மற்றொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன.

விளம்பரம்

எனவே சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ‘அபோமினபிள்’ படக்குழுவினர் இதை ஏற்காத காரணத்தால் அந்த 2 நாடுகளிலும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  லத்தியை சுழற்றி ரவுடிகளை பந்தாடும் விஷால்.! லத்தி படத்தின் ட்ரைலர் இதோ.!

இந்த நிலையில் மலேசிய தணிக்கை துறையும் சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் தணிக்கை துறைக்கு தெரிவித்த பதிலையே மலேசிய தரப்புக்கும் ‘அபோமினபிள்’ படக்குழு தெரிவித்தது. அதனை தொடர்ந்து மலேசியாவும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதித்தது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment