“ஹாலிவுட் போனாலும் தமிழன் தான் என காட்டும் தனுஷ்….வேஷ்டியில் மாஸ் காட்டிய தருணம்”!!

வெளியிட்டது

நடிகர் தனுஷ் இந்திய திரையுலகை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் களம் இறங்கி உள்ளார். அறிமுகமான படத்தில் மிக பெரிய கேலியும், கிண்டலும், அவுமானமும் பட்ட அவர் இன்று இந்திய சினிமா உலகிற்கே பெருமை சேர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பல்வேறு தேசிய விருதுகளும், பாராட்டுகளும் வாங்கி குவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

"ஹாலிவுட் போனாலும் தமிழன் தான் என காட்டும் தனுஷ்....வேஷ்டியில் மாஸ் காட்டிய தருணம்"!! 1

இப்பொது உலகின் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படமான “அவென்ஜ்ர்ஸ்: எண்ட்கேம்” படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கம் படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவென்ஜ்ர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் கிரிஸ் எவன்ஸ் நடிப்பில் அவருடன் ரயன் கோஸ்லிங், அனா டீ அர்னாஸ் என 3 பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Pic credits – gettyimages

நெட்பிளீக்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறைவான திரை அரங்குகளிலேயே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. ஒரே வாரம் அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. வருகிற ஜூலை 22ஆம் தேதி நெட்பிளீக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. பயங்கர ஆக்ஷன் சண்டை கலந்த துப்பறிவு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. தி க்ரே மேன் என்ற பெயரில் வெளியான நாவலை அடிப்படியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

சென்ற வாரம் வெளியான இந்த படத்தின் ப்ரோமோஷன் இந்தியாவில் நேற்று மும்பை மாநகரத்தில் நடைபெற்றுள்ளது. படத்தின் இயக்குனர்கள் அந்தோணி மாற்று ஜோ ரூஸ்ஸோ இருவரும் இதில் கலந்து கொள்ள, சிறப்பு விருந்தனராக பாலிவுட் நாயகன் விக்கி கௌஷல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் வேஷ்டி மற்றும் சட்டையில் தமிழருக்கு உரித்தான உடையில் கலந்து கொண்டு மாஸ் காட்டியுள்ளார். அந்த விடியோக்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

Video Courtesy – KXD shorts

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்