Categories: சினிமா

ஹீரோயின் கையை பிடித்துக்கொண்டு தெறித்து ஓடிய தனுஷ்..வைரலாகும் வீடியோ

வெளியிட்டது

நடிகர் தனுஷ், ஹீரோயின் ராஷி கண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு ஓடும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் இன்று காலை 8 மணி முதலே திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படம் பார்த்து வெளியே வந்த அனைவரும் படம் நன்றாக இருப்பதாகவும், விஐபி, யாரடி நீ மோகினி போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். படத்தில் காமெடி இல்லை, ஆக்ஷன் காட்சிகள் இல்லை, படம் மெதுவாக செல்கிறது என்ற விமர்சனங்கள் மட்டுமே வைக்கப்பட்டு வருகிறது. மற்றபடி படம் காதல் கதையை மையமாகக் கொண்டதாகவும், நித்யா மேனன் மிக நன்றாக நடித்திருப்பதாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோயின் கையை பிடித்துக்கொண்டு தெறித்து ஓடிய தனுஷ்..வைரலாகும் வீடியோ 1

தனுசுடன் நான்காவது முறையாக இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மித்ரன் ஜவகர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து தாய்க்கிழவி என்ற குத்துப்பாட்டு வெளியாகியிருந்தது, இந்தப் பாடல் இன்ஸ்டாகிராமில் பலராலும் ரீல்ஸ் செய்யப்பட்டிருந்தது. பின்னர் வெளியான மெலடி பாடலான மேகம் கருக்காதா பாடலை தனுசே எழுதி பாடியிருந்தார், இந்த பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இறுதியாக லைப் ஆஃப் பழம் என்று அனிருத் குரலில் ஒரு பாடல் வெளியாகியிருந்தது. அனிருத்தும் தனுஷும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் தான் இணைந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படத்தில் கடைசியாக இருவரும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது .டெலிவரி பாயாக தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காலை வெளியான போது, முதல் காட்சியிலேயே தனுஷ், அனிருத் மற்றும் நடிகைகள் ராஷி கண்ணா ஆகியோர் படம் பார்க்க வந்தனர். படம் முடிந்த பின்பு மிகப்பெரிய கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டதால், தியேட்டரை விட்டு வெளியே போவதற்கு தனுஷ் தனது ஹீரோயின் ராஷி கண்ணா கையைப் பிடித்துக் கொண்டு, கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக ஓடினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண..watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்