Categories: சினிமா

தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரைலர் வெளியானது..! டெலிவரி பாயாக செம்ம cute ஆக இருக்கும் தனுஷ்.!

வெளியிட்டது

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் திருச்சிற்றம்பலம். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் தசமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வருகின்ற 18ம் தேதி வெளியாக உள்ளது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள ஆகஸ்ட் 18, 2022 அன்று திரைக்கு வரும் இந்த படத்தின் விநியோகஸ்தராட உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும், அனிருத்தும் இணைந்து இருந்ததால் படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. எதிர்பார்த்தது போலவே மூன்று பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரைலர் வெளியானது..! டெலிவரி பாயாக செம்ம cute ஆக இருக்கும் தனுஷ்.! 1

2015ம் ஆண்டு வெளியான மாரி படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். பின்னர் தனுஷும், அனிருத்தும் இணையவே இல்லை. அவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு என்று இப்போது பேசப்பட்டது. ஆனால் 7 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் தாய் கிழவி பாடலும், மேகம் கருக்காதா பாடலும் வேற லெவலில் வந்துள்ளது. இரண்டையும் தனுஷே பாடியிருக்கிறார். மேகம் கருக்காதா பாடல் காதலிக்கும் காதலர்களுக்கு எல்லாம் பிடித்தமான பாடலாகி போனது. இன்ஸ்டாகிராமில் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாத ஜோடிகளே இருக்க முடியாது என்னும் அளவிற்கு அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்துள்ளது இந்த பாடல். இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தனுஷும், இயக்குனர் மித்ரன் ஜவஹரும் 4வது முறையாக இணைகிறார்கள். குட்டி, யாரடி நீ மோகனி, உத்தம்புத்திரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருந்ததால், இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரலைர் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரைலர் வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

YouTube Video Code Embed Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்