பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகையான பிரணிதா அருள்நிதியுடன் இணைந்து உதயன் என்ற படத்தில் நடித்தார். இவருக்கு அந்த படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பின்னர் கார்த்திக்குடன் இணைந்து சகுனி படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின்பு இவர் பெரிய அளவில் பேசப்பட்டார். பின்னர் கார்த்திக் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து மாஸ் படத்திலும் நடித்து இருந்தார். பின்னர் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம. ஜெமினி கணேசனும், சுருளிராஜனும். பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. தெலுங்கு கன்னடம் என வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரணிதா. இந்த நிலையில் கடந்த வருடம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் பிரணிதா. கொரனோ பரவலின் காரணமாக நண்பர்கள் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினரை மட்டும் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பிரணிதா வெளியிட்ட புகைப்படம் மிகப்பெரிய சர்ச்சையானது. அதில் கணவருக்கு காலடியில் அமர்ந்து அவருக்கு பாத பூஜை செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.பீமனா அமாவாசைக்காக தான் இவ்வாறு செய்ததாக பதிவிட்டு இருந்தார். பீமனா அமாவாசை என்பது தனது கணவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டி பெண்கள் செய்யும் பூஜை ஆகும். கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக இந்த பூஜையை செய்ததாக அவர் பதிவிட்டிருந்தார் இந்த நிலையில் அவரின் இந்த புகைப்படம் வைரலானது. பலரும் ஆணாதிக்க சமுதாயத்தில் பிரணிதாவும் இணைந்துவிட்டதாக வறுத்து எடுத்துவிட்டனர். மேலும் அவரது கணவரையும் இந்த காலத்தில் இப்படி மனைவியை ஆணாதிக்கம் செய்வதாக கூறி அவரையும் வறுத்து எடுத்துவிட்டனர்.

இது குறித்து விளக்கமளித்த பிரணிதா, வாழ்க்கையில் அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளது. 90% பேர் இதை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் கருத்தை நான் புறந்தள்ளுகிறேன். நான் ஒரு நடிகை, அதற்காக நான் பார்த்து வளர்ந்த சம்பிரதாயத்தை பின்பற்றக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரும் இந்த பூஜையை செய்து இருக்கிறார்கள், அதனால் நானும் செய்தேன். கடந்த ஆண்டும் நான் இவ்வாறு பூஜை செய்தேன் ஆனால் புகைப்படத்தை பதிவிடவில்லை. இதயத்தில் நான் ஒரு பாரம்பரிய பெண்ணாக இருக்கிறேன். சடங்குகள் செய்வதை விரும்புகிறேன், வீட்டில் இருப்பதையும், கூட்டு குடும்பத்தில் வாழ்வதையும் மிகவும் விரும்புகிறேன். மேலும் சனாதன தர்மம் மிக அழகானது, அது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கருத்து என்பதை உறுதியாக நம்புகிறேன். ஒருவர் முன்னோக்கி சிந்தித்து நவீனமாக இருக்க முடியும் என்றால் அவர் பாரம்பரியத்தை மறந்து விடுவதாக அர்த்தம் இல்லை என்றும் அவர் தனக்கு எதிராக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.