Categories: சினிமா

வாத்தி படத்தில் இருந்து தனுஷ் எழுதிய முதல் சிங்கிள் பாடல் “வா வாத்தி” வெளியானது.! Vaathi First Single

வெளியிட்டது

தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாக இருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படம் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தனுஷின் 39 வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. மேலும் படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாத்தி படத்தில் இருந்து தனுஷ் எழுதிய முதல் சிங்கிள் பாடல் "வா வாத்தி" வெளியானது.! Vaathi First Single 1

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வசூலை வாரி குவித்திருந்தது. தொடர்ந்து வாத்தி படம் டிசம்பர் 2ம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான வா வாத்தி என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடலை தமிழில் தனுஷ் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் பாடலை தனுஷ் பாட ஜிவி பிரகாஷ் இசையமைப்பது போன்ற ஒரு வீடியோவை ஜிவி பிரகாஷ் வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். படத்தில் நடிகர் தனுஷ் பள்ளி வாத்தியாராக நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவே ஆகும். படத்திற்கான பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடலான “வா வாத்தி” பாடலை நீங்களும் பாருங்கள்..! Watch the below Video.!

Youtube Video Code Embed Credits: Aditya Music Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்