சாதகமாக வந்த தீர்ப்பு..வழக்கில் இருந்து எஸ்கேப் ஆன ஐஸ்வர்யா.! மாட்டிக்கொண்டு முழிக்கும் தனுஷ்..

வெளியிட்டது

நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகள் தொடர்பான வழக்கில் ஆஜராக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார். தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார . இவர் சமீபத்தில் நடித்த வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்துதல் மற்றும் தடை சட்டத்தை மீறி சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்து இருந்தார். மது அருந்துதல் போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் பொழுது திரையில், புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று வாசகம் திரையிடப்படவில்லை.

சாதகமாக வந்த தீர்ப்பு..வழக்கில் இருந்து எஸ்கேப் ஆன ஐஸ்வர்யா.! மாட்டிக்கொண்டு முழிக்கும் தனுஷ்.. 1

இதைப் பார்த்த தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பு, 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் ஒன்றை அளித்தது. இந்த விசாரணையை மேற்கொண்ட சுகாதாரத் துறை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இந்த விசாரணையை வழக்காக ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம், நாளை இருவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை ஆஜராக விலக்கு அளித்து வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர இருப்பதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் அவர் நடித்த படத்தின் நிகழ்ச்சிக்காக சென்றிருப்பதால் சென்னை திரும்பிய பிறகு அவரிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி அளித்த உத்தரவால் நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்