அவரு கதையில எழுதுற எல்லாமே நிஜத்துல நடக்குது சார்..செம்ம திரில்லிங் ஆக வெளியானது அருள்நிதியின் தேஜாவு ட்ரைலர்

அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள தேஜா வு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தேஜா வுஎன்பது 2022 ஆம் ஆண்டு வெளிவர உள்ள தமிழ்த் திரைப்படமாகும், இது அரவிந்த் சீனிவாசனால் எழுதி இயக்கப்பட்டது. ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.முத்தையா புரொடக்ஷன் ஆகியவற்றின் கீழ் கே.விஜய் பாண்டி மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் தயாரித்துள்ளனர். நவீன் சந்திரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் தெலுங்கில் அதே பெயரில் வெளியாகிறது. இது ஒரு மர்ம திரில்லர் படம்.

அவரு கதையில எழுதுற எல்லாமே நிஜத்துல நடக்குது சார்..செம்ம திரில்லிங் ஆக வெளியானது அருள்நிதியின் தேஜாவு ட்ரைலர் 1

விளம்பரம்

தேஜா வு தமிழ் திரைப்படத்தில் அருள்நிதி தமிழரசு போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் வேடத்தில் நடித்தாலும், அருள்நிதி ஒரு காட்சிக்குக்கூட போலீஸ் சீருடையில் நடித்திருக்க மாட்டார். ஸ்ம்ருதி வெங்கட், மது, அச்யுத் குமார், மைம் கோபி, சேத்தன், காளி வெங்கட் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் மௌனகுரு விசாரணை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தொடர்புடையவை  ஜெயிலர் படத்தில் இருந்து புது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய படக்குழு.!

அவரு கதையில எழுதுற எல்லாமே நிஜத்துல நடக்குது சார்..செம்ம திரில்லிங் ஆக வெளியானது அருள்நிதியின் தேஜாவு ட்ரைலர் 3

விளம்பரம்

படத்தைப் பற்றி அரவிந்த் கூறும்போது, ​​“அருள்நிதி மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க தயங்கினார், ஆனால் படத்தின் முதல் பாதியைப் கூறிய போது, ​​இரண்டாவது பாதியை நான் விவரிக்க விரும்பினார். படம் வழக்கமான த்ரில்லர் படமாக இருக்காது, முதல் காட்சியில் இருந்தே பல திருப்பங்கள் இருக்கும். கதை ஒரு இரவும் பகலும் நடக்கும் எனவும் அரவிந்த் கூறியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment