இரண்டு நாட்களாக இணையதளத்தை ஆக்கிரமித்து வரும் செய்தி என்னவென்றால், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் என்ஜாயி எஞ்சாமி பாடலைப் பாடிய அறிவு அழைக்கப்படாததே ஆகும். கடந்த வருடத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான பாடல் தான் என்ஜாயி எஞ்சாமி. இந்தப் பாடல் சுமார் 430 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை எழுதி இயக்கி அதில் நடித்து பாடியிருந்தவர் தெருக்குரல் அறிவு என்பவர். பாடலை கம்போஸ் செய்து தயாரித்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இதில் அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் மகளான தீ பாடி இருப்பார். இந்த நிலையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்த பாடல் பாடப்பட்டது. அப்போது இந்த பாடலை தீயுடன் சேர்ந்து கிடாக்குழி மாரியம்மாள் பாடினார். அதில் நிறைய பேர் அறிவு எங்கே? அவர் இல்லாமல் எப்படி இந்த பாட்டை பாடலாம் என்று கேள்வி எழுப்பி வந்தனர். கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இந்த நிலையில் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். ஆறு மாத காலமாக தூங்காமல் இரவு பகலாக இந்த பாடலை எழுதினேன், நாம் தூங்கும் போது நம்முடைய பொக்கிஷங்களை திருடி விடுவார்கள், நாம் விழித்திருக்க வேண்டும், அப்போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, உண்மை ஒருநாள் வெல்லும் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு விளக்கத்தை அளித்திருந்தார். அதில் அறிவு அமெரிக்கா செல்ல இருப்பதால் செஸ் ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று நிகழ்ச்சி ஏற்ப்பாட்டளர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், அறிவு ஒரு சிறந்த பாடகர் என்றும், அவர் பெரிய பாடகராக வரவேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் தனது அறிக்கையில் சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டு, வாங்கோ வாங்கோ ஒன்னாகி என்று முடித்திருந்தார். இதன் மூலம் சந்தோஷ் நாராயணன், தீ மற்றும் அறிவுக்கிடையே பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தீ ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் என்ஜாய் எஞ்சாமி பாடலை நாங்கள் மூவரும் இணைந்து தான் பாடினோம், அதில் வரும் வருமானத்தையும், பாடும் உரிமையும் நாங்கள் மூவரும் சமமாக பங்கிட்டு கொண்டுள்ளோம். நான் எப்போதும் அறிவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அறிவையும், சந்தோஷ் நாராயணன் குறித்தும், பெருமையாக பேசி இருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடகர் அறிவை முன்னிலைப்படுத்தி வருகிறேன். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதும், அவர் குரல் அதிகம் வெளியில் தெரிய வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். இந்தப் பாடல் மூலம் கிடைக்கும் பெருமையும் புகழும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுக்கு கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருக்கிறது.
மேலும் கடந்த ஆண்டு வெளியான ரோலிங் ஸ்டோன் இந்தியா இதழின் அட்டை படத்தில் தன்னுடைய புகைப்படமும் ரேப் பாடகர் ஷான் படமும் இடம் பெற்றிருந்தது. இது என்ஜாய் என்ஜாமி பாடலுக்காக வெளியான அட்டைப்படம் அல்ல. தன்னுடைய அடுத்து வரவுள்ள ஆல்பத்திற்கான அட்டை படமே ஆகும் என்று தீ விளக்கம் அளித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் போது அறிவையும் பங்கேற்க வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர்் ஆனால் அவர் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. எஞ்சாமி பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் தீ. அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below Video..
YouTube Video Code Embed Credits: NewsGlitz