எல்லாத்த விட்டும் விலகுறேன்.! லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு..திடீரென விலகிய லோகேஷ்..

‘மாநகரம்’ என்ற தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் அவருக்கு தமிழில் முன்னணி நடிகரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது படமே மிகப்பெரிய நடிகரான விஜயை வைத்து ‘மாஸ்டர்’ என்ற படத்தை இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே, இளம் வயதிலேயே முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ்  உயர்ந்தார். அடுத்ததாக அவர் செய்த சம்பவம் மிகப்பெரியதாக இருந்தது. உலகநாயகன் கமலஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

எல்லாத்த விட்டும் விலகுறேன்.! லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு..திடீரென விலகிய லோகேஷ்.. 1

விளம்பரம்

வங்கியில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்கு வந்த இவருக்கு, விக்ரம் படம் மிகப்பெரிய பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துள்ளது. உலக அளவில் 400 கோடிக்கும் மேலாக வசூலையும், தமிழகத்தில் மட்டும் 170 கோடி ரூபாய் வசூலையும் குவித்ததாக தகவல்கள் வெளியானது, தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்ற பட்டியலில் விக்ரமும் மாஸ்டரும் இணைந்துள்ளன. முதல் இடத்தில் விக்ரமும், இரண்டாவது இடத்தில் மாஸ்டரும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியான பின்பு, தளபதி 67 என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

தொடர்புடையவை  சிறப்பு காட்சியாக சுறா!

எல்லாத்த விட்டும் விலகுறேன்.! லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு..திடீரென விலகிய லோகேஷ்.. 3

விளம்பரம்

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது அவரது ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், சிறிது காலம் சமூக வலைதளங்களை விட்டு விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறார். இருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பின் மூலமாக விரைவில் உங்களை சந்திக்கிறேன், மீண்டும் வருகிறேன் என்று அறிவித்து விடை பெற்று இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். ஆனால் தளபதி 67 படத்தில் முழு கவனம் செலுத்த இருப்பதால் அவர் சமூக வலைதள பக்கங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியை நீங்களும் காண… Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Indiaglitz

விளம்பரம்

Leave a Comment