Categories: சினிமா

துருவ் விக்ரம் இயக்கி, நடித்து, பாடியுள்ள “மனசே” ஆல்பம் சாங் வெளியானது.! Dhruv Vikram Album Song

வெளியிட்டது

நடிகர் துருவ் விக்ரம் தானே எழுதி, பாடி, இயக்கியிருக்கும் தனது முதல் ஆல்பத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் தற்போது ஒரு ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை அவரே எழுதி இயக்கி பாடியும் இருக்கிறார். துருவ் விக்ரம் முதலில் பாலா இயக்கிய வர்மா என்ற படத்தில் நடிக்க கமிட் ஆனார். சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. பின்னர் அதே படத்தை ஆதித்ய வர்மா என்று பெயர் மாற்றி வெளியிட்டனர். பின்னர் துருவ் தனது தந்தையுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மகான்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஓடிடி தளத்திலேயே வெளியானது இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துருவ் விக்ரம் இயக்கி, நடித்து, பாடியுள்ள "மனசே" ஆல்பம் சாங் வெளியானது.! Dhruv Vikram Album Song 1

பின்னர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜுடன் இணைந்து நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். எனவே துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இணைப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் துருவ. விக்ரம் ஒரு youtube சேனல் ஒன்றை தொடங்கியிருந்தார். அதில் தனக்கு இசை மற்றும் பாடலில் மிக ஈடுபாடு இருப்பதாக கூறியிருந்தார். மேலும் படம் இயக்குவதிலும் ஈடுபாடு இருப்பதாக கூறியிருந்தார். விரைவில் தனது தந்தை விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் ‘மனசே’ என்ற ஒரு ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

இந்த ஆல்பத்தை அவரே எழுதி இயக்கி பாடியும் இருக்கிறார். தந்தை போலவே அவர் பன்முகத் திறமையாளராக இருக்கிறார் என்று பலரும் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். அவரின் அந்த ஆல்பத்தை நீங்களும் காண.கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். Watch the below video..

YouTube Video Code Embed Credits:

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்