போண்டா மணிக்கு உதவி செய்வீர்களா? செய்தியாளர்களின் கேள்விக்கு வடிவேலு சொன்ன அதிர்ச்சி பதில்

சிறுநீரக செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காமெடி நடிகர் போண்டாமணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று வடிவேலு ஒரு பேட்டியின் போது தெரிவித்து இருக்கிறார். காமெடியில் துணை வேடங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் போண்டாமணி. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். போண்டாமணி ஒரு பேட்டியின் போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிஜ சாக்கடையில் விழச் சொன்னார்கள். அப்போது விழுந்த போது தமக்கு சாக்கடை தண்ணீர் நுரையீரலில் ஏறிவிட்டதால் நுரையீரல் பாதிப்பும், சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டதாக கண்ணீர் மல்க கூறியிருந்தார். மேலும் தனது சிகிச்சைக்கு உதவுமாறு பலரிடமும் அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

போண்டா மணிக்கு உதவி செய்வீர்களா? செய்தியாளர்களின் கேள்விக்கு வடிவேலு சொன்ன அதிர்ச்சி பதில் 1

விளம்பரம்

இந்த நிலையில் அவரை நேற்று சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் இன்று முதல் அவருக்கு டயாலிசிஸ் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு்செய்துள்ளதாக கூறினார். மேலும் உறுப்பு தானம் பெற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதையும் ஆராய்ந்து வருவதாக மா. சுப்ரமணியம் கூறியிருந்தார். மேலும் போண்டாமணியின் மருத்துவ செலவு அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வடிவேலு போன்ற நடிகர்கள் தமக்கு உதவி செய்ய வேண்டும் என்று போண்டாமணி தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்புடையவை  திடீரென மொட்டை தலையுடன் புகைப்படங்களை வெளியிட்ட காயத்ரி ரகுராம்.! இதுதான் காரணமா.?

போண்டா மணிக்கு உதவி செய்வீர்களா? செய்தியாளர்களின் கேள்விக்கு வடிவேலு சொன்ன அதிர்ச்சி பதில் 3

விளம்பரம்

இதுகுறித்து வடிவேலு அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர், தன்னால் இயன்றதை செய்வேன் என்று பதில் அளித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த வடிவேலுவிடம், போண்டாமணியின் சிகிச்சை குறித்து கேட்டபோது, கண்டிப்பாக என்னால் இயன்றதை செய்யவேன் என்று கூறினார். மேலும் படித்துறை பாண்டி படத்தில் வரும் சுமதி என்பவர் தான் வேலையில்லாமல் இருப்பதாக கூறினாரே என்று கேட்டபோது, தான் இயக்குனர்களிடம் இது குறித்து கேட்க முடியாது, முன்பெல்லாம் காமெடிக்கு என்று தனி ட்ராக் இருக்கும். தற்போது அதெல்லாம் இல்லை, அதனால் யாருக்காகவும் என்னால் பேச முடியவில்லை என்று கூறிவிட்டு சென்றார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment