நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சாகுந்தலம் படத்தின் மோஷன் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது பல படங்களின் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் “சாகுந்தலம்” என்னும் படத்தில் நடித்த ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்த போதிலும் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தப் படத்தை குணசேகர் என்பவர் எழுதியிருக்கிறார், சாய் மாதவ் வசனமும் நீலிமா குணா மற்றும் தில் ராஜு ஆகிய இருவர் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ் ஜெயமோகனும் நடித்துள்ளனர். இவருடன் சேர்ந்து அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த படத்தின் முதல் பார்வையை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில் அன்னங்கள், மயில்கள், மான்கள், முயல்கள் ஆகியவை சூழ சமந்தா ஒரு அழகான சோலையின் நடுவில் அமர்ந்து இருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது மோஷன் போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் நவம்பர் நான்காம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த வீடியோஙை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Tips Tamil