Categories: சினிமா

6 ஆண்டுகளாக முடங்கி கிடந்த துருவ நட்சத்திரம்.! புது வீடியோவை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்த படக்குழு.!

வெளியிட்டது

நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வீடியோவுடன் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கௌதம் – விக்ரம் இணைந்து உருவான இந்த முதல் திரைப்படம் சில காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒருமனம் என்கிற பாடல் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் இந்த படம் பாதியிலேயே நின்று போனது. 5 ஆண்டுகள் ஆகியும் ஒரு அப்டேட் கூட வெளியாகாமல் இருந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளாக முடங்கி கிடந்த துருவ நட்சத்திரம்.! புது வீடியோவை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்த படக்குழு.! 1
இதனிடையே தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கான பின்னணி இசைப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார். படம் குறித்து பேசிய அவர் டால்பி 9.1.4 தரத்தில் திரையரங்குகளில் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து அடுத்த அப்டேட்டுகள் வெளியாகத் தொடங்கி இருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வருகிற ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இதனால் விக்ரமின் ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியில் இருக்கின்றனர். ஜூலை 19ஆம் தேதிக்கு பின்னர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இன்ப அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கின்றனர். “அவன் போறான் பிளைட்டுல, இப்ப பறந்து புட்டான் ஹைட்டுல” என்கிற வித்தியாசமான பாடல் வரிகளுடன் இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தற்போது youtube ட்ரெண்டிங்கிலும் இந்த பாடல் இடம் பிடித்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sony Music South.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்