Categories: சினிமா

எல்லாம் அவளை மறக்கத்தான்.! பொன்னியின் செல்வன் டயலாக்கை அப்படியே பேசி காட்டிய துருவ்

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது விக்ரமின் வசனம் ஒன்றை அப்படியே அவர் குரலில் பேசி இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 30-ம் தேதி வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் விக்ரம். இவர் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து ட்விட்டரில் விக்ரம் பதிவு ஒன்றையும் போட்டிருந்தார். அவருடைய மகன் துருவ் விக்ரமும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்கிற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார் துருவ் விக்ரம்.

எல்லாம் அவளை மறக்கத்தான்.! பொன்னியின் செல்வன் டயலாக்கை அப்படியே பேசி காட்டிய துருவ் 1

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படத்தை தமிழில் மொழிபெயர்த்து ஆதித்ய வர்மா என்று வெளியிட்டனர். இந்த படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய துருவ் விக்ரம் பின்னர் தனது அப்பாவுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்தார். தியேட்டர்களில் வெளியாக வேண்டிய இந்த படம் துரதிஷ்டவசமாக கொரோனா காரணமாக ஓடிடியில் வெளியானது. இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வரும் துருவ் விக்ரம் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அதுபோல சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது தந்தை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பேசும் வசனமான “எல்லாம் அவளை மறக்கத்தான்” என்ற வசனத்தை பேசினார் அப்படியே விக்ரம் குரலில் அவர் பேசியிருந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுக்கு அப்படியே விக்ரம் போன்ற குரல் என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்