“எனக்கு மூணாவது குழந்தை பிறந்து இருக்கு” சமூக வலைத்தளத்தில் அறிவித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக விளங்கிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் தங்களுக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சமூக வலைதளப்பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். சில நாட்களாக அவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உறுதி செய்து இருக்கிறார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கை தொடங்கி பின்னர் மிமிக்ரி கலைஞர், நடனம் என பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

"எனக்கு மூணாவது குழந்தை பிறந்து இருக்கு" சமூக வலைத்தளத்தில் அறிவித்த சிவகார்த்திகேயன்.! 1

விளம்பரம்

டாக்டர், டான் போன்ற ரூ.100 கோடி வசூல் படங்களை கொடுத்த அவர் கடைசியாக ‘அயலான்’படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ‘சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, சில படங்களையும் தயாரித்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மாமன் மகள் ஆர்த்தியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

தொடர்புடையவை  இந்த வாரமும் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆண் போட்டியாளர்.! யாருனு தெரியுமா.?

"எனக்கு மூணாவது குழந்தை பிறந்து இருக்கு" சமூக வலைத்தளத்தில் அறிவித்த சிவகார்த்திகேயன்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி மூன்றாவது முறை கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இது குறித்து எதுவும் வெளியிடாமல் இருந்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றே பகிர்ந்து இருக்கிறார். அதில் வணக்கம் எங்களுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

"எனக்கு மூணாவது குழந்தை பிறந்து இருக்கு" சமூக வலைத்தளத்தில் அறிவித்த சிவகார்த்திகேயன்.! 5

விளம்பரம்

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும், குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்களின் மூன்றாவது குழந்தைக்கு தர வேண்டுகிறோம். நன்றி, அன்புடன் சிவகார்த்திகேயன்” என பகிர்ந்துள்ளார் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Twitter Original Source From: Sivakarthikeyan

விளம்பரம்

Leave a Comment